திருப்பதி கோவிலை டிரோனில் படம்பிடித்தவர்கள் மீது வழக்கு

திருப்பதி கோவிலை ட்ரோன் மூலம் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Update: 2023-01-22 15:00 GMT

உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பலத்த பாதுகாப்பு உள்ளது . கோவில் மீது விமானங்கள் கூட பறக்க தடை உள்ளது. இந்த நிலையில் ஏழுமலையான் கோவில் டிரோன் கேமரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ சமூக ஊடகமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐகான் என்ற பெயரில் பதிவேற்றப்பட்டுள்ளது . இதனை அடுத்து தேவஸ்தானத்தின் விஜிலன்ஸ் அதிகாரிகள் போலீசார் மூலம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . இதில் ஹைதராபாத்தில் இருந்து வந்தவர்கள் டிரோன் கேமரா மூலம் வீடியோ காட்சிகள் பதிவு செய்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.


இந்த வீடியோ டிரோன் கேமரா மூலம் எடுக்கப்பட்டதா அல்லது கூகுளில் இருந்து சேகரிக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு அதிகாரி நரசிம்ம கிஷோர் வெளியூரில் அறிக்கையில் தெரிவித்துள்ளார் .அறங்காவலர் குழு தலைவர் சுபா கூறும் போது ஏழுமலையான் கோவில் ஆகம சாஸ்திரப்படி கோவில் மீது 'விமானம்' ஆளில்லா விமானங்கள்' செல்ல தடை செய்யப்பட்டுள்ளது என்றார்.





 


Similar News