ஆட்டம் கண்ட பாகிஸ்தான் - அரசாங்கத்தை நடத்த சீனாவிடமிருந்து 2.3 பில்லியன் டாலர் கடன் வாங்கியது!

Update: 2022-06-28 09:38 GMT

நாட்டின் குறைந்து வரும் பண கையிருப்பை சமாளிக்க, சீன வங்கிகளின் கூட்டமைப்பிலிருந்து பாகிஸ்தானுக்கு 2.3 பில்லியன் டாலர் கடனாக வழங்கப்பட்டது. 

இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் அந்நாடுகளை அரசியல் நெருக்கடியை நோக்கி கொண்டு செல்லும் நிலையில் இதன் பின்னணியில் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டமும், அதன் மூலம் கொடுக்கப்பட்ட கடன்களும் மிக முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் தற்போது மீண்டும் சீனாவிடம் 2.3 பில்லியன் டாலர் அளவுக்கு கடன் வாங்கியுள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி சமூக வலைதளங்களில், "அதிபர் ஜி ஜின்பிங், வெளியுறவு அமைச்சர் வாங் யீ மற்றும் சீன மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சீன வங்கிகளின் கூட்டமைப்பு இன்று 15 பில்லியன் ரிங்கிட் கடன் வசதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது என்று தெரிவித்தார். 

சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இந்தக் கடன் ஒப்பந்தம் சீனாவின் கடன் வலையில் சிக்குவதற்கு வழிவகுக்கும். இதற்கிடையில், மார்ச் மாத இறுதியில், வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தியதன் காரணமாக, ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் வைத்திருக்கும் அந்நியச் செலாவணி கையிருப்பு 2.915 பில்லியன் அமெரிக்க டாலர்களால் சரிந்தது. இதனால், சீனாவுடனான உறவுகளைப் பொறுத்தவரை, பாகிஸ்தான் இருண்ட பொருளாதார எதிர்காலத்தை எதிர்கொள்கிறது.

இந்த கடன் ஒப்பந்தத்தின் படி இன்னும் சில நாட்களில் அந்தப் பணம் வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Input From: NDTV

Similar News