சட்டவிரோத கடன் செயலிகளுக்குத் தடை மத்திய அரசு அதிரடி
சட்டவிரோத கடன் செயலிகளுக்கு தடை வருகிறது.ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை
இந்தியாவில் சட்ட விரோத கடன் செய்திகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். உடனடி கடன் என்ற பெயரில் மக்களுக்கு கடன் கொடுத்து, பின்னர் மிரட்டி பணம் பறிக்கும் செல்போன் செயலிகள் அதிகரித்து வருகின்றன. பல்வேறு செயலிகள் இவ்வாறு கடன் வழங்கி வருகின்றன.
இந்த செயலிகளின் பின்னணியில் சீன நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களின் கைவரிசை அடங்கியுள்ளது .இந்த செயலிகள் மீதான புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. எனவே இந்த கடன் மோசடியில் ஈடுபட்டு வரும் செயலிகள் மற்றும் அதன் பின்னணியில் இருக்கும் நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த சட்டவிரோத கடன் செயலலிகளை இந்தியாவில் தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக விரிவான திட்டம் வகுப்பதற்காக நிதி அமைச்சக அதிகாரிகள் ரிசர்வ் வங்கி மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அதிகாரிகளுடன் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார் .
அப்போது அவர் குறைந்த வருவாய் கொண்ட ஏழை மக்களுக்கு கடன் கொடுத்து வரும் இந்த கடன் செயலிகள் அதிக வட்டியில் திரும்ப வசூலிப்பதுடன் மிரட்டல், குற்ற செயல்களிலும் ஈடுபடுவது குறித்து கவலை தெரிவித்தார் .இந்த செயலிகள் மூலம் நிதி மோசடி ,வரிஏய்ப்பு, தகவல் சுரண்டல் ,போலி நிறுவனங்கள் உள்ளிட்ட குற்ற செயல்கள் நடைபெறுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பின்னர் இந்த கடன் செயலிகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி பட்டியல் தயார் செய்யவும் அவற்றில் சட்டவிரோத செய்திகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது. மோசடிக்கு பயன்படுத்தப்படும் போலி கணக்குகளை ரிசர்வ் வங்கி கண்காணிக்கவும் மற்றும் செயலற்ற வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை மதிப்பாய்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டது .மேலும் கார்ப்பரேட் நலத்துறை அமைச்சகம் பூனை நிறுவனங்களை அடையாளம் கண்டறிந்து அவற்றின் பதிவை ரத்து செய்யவும் அறிவுறுத்தப்பட்டது . இந்த மோசடிகள் தொடர்பாக மக்களுக்கு விரிவான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டது