மத்திய அரசின் சூப்பரான பென்ஷன் திட்டம் - யாரெல்லாம் பயன் பெறுவார்கள்?

வெறும் 200 ரூபாய் முதலீடு செலுத்தினால், ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் பென்ஷனை தம்பதிகள் வாங்கலாம்? எப்படி தெரியுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும்?

Update: 2023-08-01 17:45 GMT

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்களின் நன்மைக்காக அறிவித்து வருகிறது. அதில், ஒன்றுதான் பிரதம மந்திரி யோகி மான் - தன் ( (PM-SYM பிரதம மந்திரியின் ஷ்ரம் யோகி மான்-தன்) என்ற திட்டமாகும்.


அமைப்பு சாரா துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, ரிடையர் ஆனபிறகு வழங்கப்படும் பென்ஷன் திட்டம்தான் இது.. கடந்த 2019-ல் இந்த பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன் (PM-SYM) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.. இந்த திட்டம் திருமணமான தம்பதிகள் மாதத்திற்கு ரூ.200 முதலீடு செய்தால் போதும்.. ஆண்டு வருமானம் ரூ.72,000 பெற முடியும்.


ரிக்‌ஷா தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள், சுமை தூக்குபவர்கள், ஆட்டோ, கட்டுமானத் தொழிலாளர்கள்,விவசாயக் கூலிகள், வீட்டு வேலை செய்பவர்கள், கைத்தறி நெசவாளர்கள், நூல் மில், தோல் தொழிற்சாலைகளில் வேலை செய்வோர் போன்ற எல்லா வகையான கூலித்தொழிலாளர்களும் இந்த திட்டத்தின் கீழ் பலன் பெற முடியும்.


மேலும், வருமான வரி கட்டாத கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் அத்தனை பேருக்கும் இந்த திட்டம் பொருந்தும். மாத வருமானம் ரூ. 15,000/ அல்லது அதற்கும் குறைவாக உள்ள மற்றும் 18-40 வயதுடைய நுழைவு வயதுப் பிரிவைச் சேர்ந்தவர்களும் அடங்குவார்கள்.


வெறும் 200 ரூபாய் முதலீடு செய்வதன் மூலம், ஓய்வுக்காலத்திற்கு பிறகு, 72000 ரூபாயை ஓய்வூதியமாகப் பெற முடியும். 60 வயதை எட்டிய பிறகு, குறைந்தபட்சம் 3000 ரூபாய் ஓய்வூதியத்தை பெறுவார்கள். ஒருவேளை இந்த ஓய்வூதியம் பெறும்போது, ​​சந்தாதாரர் இறந்துவிட்டால், பயனாளியின் மனைவி, பயனாளி பெறும் ஓய்வூதியத்தில் 50% குடும்ப ஓய்வூதியமாக பெற உரிமை உண்டு. ஆனால், இந்த குடும்ப ஓய்வூதியம் மனைவிக்கு மட்டுமே பொருந்தும்.


இந்த திட்டத்தில் சேருவதற்கு மொபைல் போன் + வங்கி கணக்கு + ஆதார் எண் கண்டிப்பாக தேவை. தகுதியான சந்தாதாரர் அருகிலுள்ள அருகிலுள்ள மக்கள் சேவை மையத்திற்கு அதாவது CSCகளுக்கு சென்று, சுய சான்றிதழின் அடிப்படையில் PM-SYM-க்கு பதிவு செய்து கொள்ளலாம். அதற்கு பிறகு, முதலீடு செய்ய தொடங்கினால் போதும்.. மாதந்தோறும் ரூ.100 தவணைத் தொகை செலுத்திக்கொண்டே இருந்தால், வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக நீண்ட காலம் இருக்கலாம்.


SOURCE :Oneindia.com



Similar News