காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு மத்திய அரசு கடும் கண்டனம்: இந்திய தூதரக அதிகாரிகளுக்கு எதிராக சுவரொட்டிகள்

இந்திய தூதரக அதிகாரிகளுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதை தொடர்ந்து காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு மத்திய அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

Update: 2023-07-07 06:15 GMT

அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து,ஆகிய நாடுகளில்  ஆதரவாளர்களின் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. அங்குள்ள இந்திய தூதரகங்கள் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு அவர்களை அச்சுறுத்தும் வகையில் சுவரொட்டிகளை காலிஸ்தான் ஆதரவாளர்கள் வெளியிட்டனர்.


இது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த நிலையில் டெல்லியில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி "கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் பயங்கரவாதிகளுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் இடம் கொடுக்கக் கூடாது. வெளிநாட்டில் உள்ள இந்திய தூதரகங்கள் மற்றும் தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பு அரசாங்கத்துக்கு மிகவும் முக்கியமானது. இந்திய தூதரக அதிகாரிகளுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் வெளியிடப்பட்ட சுவரொட்டிகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை"  என கூறினார்.


SOURCE :DAILY THANTHI

Similar News