சவூதிக்கு மெக்கா போல இந்தியாவிற்கு ராமர் கோவில் - 2024 ஆம் ஆண்டில் அயோத்தி ஒரு பெரிய மத சுற்றுலாத் தலமாக தரம் உயர்த்தப்பட்டிருக்கும்!

சவூதிக்கு மெக்கா போல இந்தியாவிற்கு ராமர் கோவில் - 2024 ஆம் ஆண்டில் அயோத்தி ஒரு பெரிய மத சுற்றுலாத் தலமாக தரம் உயர்த்தப்பட்டிருக்கும்!

Update: 2020-08-06 09:00 GMT

நேற்று உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டுவிழா வெகுசிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. கோவில் கட்டுமானத்தோடு நின்றுவிடாமல், அயோத்தி நகரை சிறந்த சுற்றுலா தலமாக மாற்றுவதற்கான பணிகளும், முழு வீச்சில் நடந்து வருகிறது.

அயோத்தியில் புதிய விமான நிலையம் மற்றும் ஒரு ரயில் நிலையத்தை உள்ளடக்கிய ரூ500 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டிலான திட்டத்தினை உத்தரப்பிரதேச அரசு தற்போது அறிவித்துள்ளது.

ராமர் கோயில் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் 2024 ஆம் ஆண்டளவில் அயோத்தி ஒரு பெரிய மத சுற்றுலாத் தலமாக தரம் உயர்த்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி, அயோத்தியில் விஐபிகளின் பயன்பாட்டிற்காக தற்காலிக விமான நிலையம் உள்ளது. பின்வரும் நாட்களில் இது அனைவருக்கும் பயன்படும் விமான நிலையமாக மாற்றப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தினை இரண்டாண்டுகளுக்கு முன்னரே மாநில அரசு அறிவித்திருந்தது. ஆனால், திட்டத்தின் செயல்பாடுகளில் பெரிய அளவு முன்னேற்றம் ஏற்படவில்லை. நிலம் கையகப்படுத்தும் பணி தொடர்ந்து வருகிறது. 

தேசிய நெடுஞ்சாலை மேம்படுத்தலுக்கு 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. நீர் வழங்கல் திட்டத்தினை மேம்படுத்தவும் 54 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போல பேருந்து நிலையத்தினை மேம்படுத்த ரூ .7 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பழம்பெரும் துறவியும் கவிஞருமான கோஸ்வாமி துளசிதாசுக்கு மண்டபம் அயோத்தியில் உள்ளது. இதனை மேம்படுத்த ரூ .16 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் ராஜ்ஸ்ரீ தஸ்ரத் மருத்துவக் கல்லூரியும் மேம்படுத்தப்படும், 134 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Similar News