சொல்லிக்க ஒண்ணுமில்லையாம்... டெல்லிக்கு படைஎடுப்பாம் ! சந்திரபாபு நாயுடு குறித்து கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்!!

சொல்லிக்க ஒண்ணுமில்லையாம்... டெல்லிக்கு படைஎடுப்பாம் ! சந்திரபாபு நாயுடு குறித்து கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்!!

Update: 2019-05-20 09:39 GMT

லோக்சபா தேர்தலுடன் நடந்து முடிந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உள்ளதாகவும், சந்திரபாபு நாயுடு படு தோல்வி அடைந்து முதல்வர் பதவியை இழப்பார் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.


இந்தியா டிவி , சிஎன்எக்ஸ் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: வரும் தேர்தல் முடிவில் மொத்தம் 175தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 100 முதல் 110 வரையிலான தொகுதிகளை பிடிக்கும். கடந்த ஆண்டில் இந்த கட்சி 67தொகுதிகளை பிடித்திருந்தது. இம்முறை 40 தொகுதிகள் வரை கூடுதலாக பெற வாய்ப்பு உள்ளது.


இது போல் ஆளும்கட்சியான தெலுங்குதேசம் இந்த முறை 40 முதல் 45 தொகுதிகளை மட்டுமே பெற முடியும். கடந்த முறை இந்த கட்சி பெற்ற தொகுதிகள் 102. பா.ஜ.,வுக்கு 4 முதல் 6 தொகுதிகள் வரை கிடைக்கும். காங்கிரசுக்கு 8 முதல் 12 தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.


சந்திரபாபு நாயுடு ஆட்சியை இழப்பார். ஜெகன்மோகன் ரெட்டி பெரும் மெஜாரிட்டியுடன் முதல்வராவார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


இது போல் லோக்சபா தேர்தலில் ஆந்திராவில்; ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் உள்ள 25 தொகுதிகளில் 18 தொகுதிகளை கைப்பற்றும். எஞ்சிய 7 தொகுதிகளை தெலுங்குதேசம் பெறும். பா.ஜ.,வுக்கும், காங்கிரசுக்கும் ஓட்டுசதவீதம் அதிகரிக்கும் ஆனால் ஒரு தொகுதிகளைகூட பிடிக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.


 இந்த நிலையில் மீண்டும் வெற்றி பெற்றதும் தனது மகனை முதல்வராகிவிட்டு டெல்லிக்கு பிரதமராகும் வாய்ப்புக்காக கனவு கண்டுகொண்டு இருந்த சந்திரபாபுநாயுடுவின் நிலை இப்படியாகிவிட்டதே என சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.


Similar News