“சந்திரயான் 2: புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமளிக்கும்” - பிரதமர் மோடி பெருமிதம்!!

“சந்திரயான் 2: புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமளிக்கும்” - பிரதமர் மோடி பெருமிதம்!!

Update: 2019-07-22 10:42 GMT


“சந்திரயான் - 2” விண்கலம் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. சரியாக மதியம் 2.43 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.


48 நாள் பயணத்திற்கு பின்னர், சந்திரனின் தென்துருவ பகுதியில் சந்திரயான்-2 தரை இறங்கி ஆய்வு மேற்கொள்ளும். சந்திரனின் தென்துருவ பகுதியில் இதுவரை எந்த நாடும் ஆய்வு மேற்கொண்டதில்லை. அந்த வகையில் இந்தியா புதிய சாதனை படைக்க இருக்கிறது.





“சந்திரயான் - 2” - புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமளிக்கும் என்று பிரமதர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-


சந்திரயான் 2 - இன் வெற்றியானது நமது திறமையான இளைஞர்களை, விஞ்ஞானத்தின் பக்கம் ஈர்க்கும் உந்து சக்தியாக உள்ளது. அவர்களின் உயர்தர ஆராட்சிக்கும், புதிய கண்டுபிடிப்புகளுக்கும் இது ஊக்கம் அளிக்கும். 





சந்திரயான் விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள். விண்வெளியில் இந்தியாவின் ஆராய்சிக்கு புதிய ஊக்கம் அளிக்கும் வகையில் செயல்பட்டுள்ளதற்காக நன்றி. நிலவைப் பற்றிய அரிய தகவல்களை நாம் தெரிந்துகொள்ள இது வழிவகுக்கும்.




https://twitter.com/narendramodi/status/1153241546738696192



இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.


Similar News