நாளை நிலவில் சந்திராயன் இறங்கும் நிகழ்வு ! பெங்களூர் இஸ்ரோவில் இருந்து பிரதமர் மோடி நேரடியாக பார்க்கிறார்!!

நாளை நிலவில் சந்திராயன் இறங்கும் நிகழ்வு ! பெங்களூர் இஸ்ரோவில் இருந்து பிரதமர் மோடி நேரடியாக பார்க்கிறார்!!

Update: 2019-09-06 10:52 GMT

நிலவை ஆராய்வதற்காக இந்திய விண் வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ‘சந்திரயான்-2’ விண்கலத்தை ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 22-ம் தேதி விண்ணில் செலுத்தியது. பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வந்த சந்திரயான் விண்கலம் பின்னர் இதில் இருந்து விலகி, நிலவின் சுற்றுப்பாதையில் வலம் வருகிறது. பின்னர் பல நிலைகளை அடைந்து தற்போது இறுதிகட்டத்தை நோக்கி சந்திரயான் விண்கலம் அடைந்துள்ளது.


48 நாட்கள் பயணத்துக்குப் பிறகு, சந்திரயானின் லேண்டர் பகுதி நாளை (செப்டம்பர் 7) அதிகாலை நிலவில் மெதுவாக தரையிறங்க உள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


நிலவில் சந்திரயான் இறங்கும் காட்சியை பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் ஆய்வு மையத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி நேரலையில் காண உள்ளார்.


இந்தநிலையில் சந்திரயான் பயணம் குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘130 கோடி இந்தியர்களும் உற்சாகத்துடன் இங்கு காத்திருக்கின்றனர். சந்திரயான் தனது இலக்கை எட்டி சந்திரனின் தெற்கு முனையில் தரையிறங்க இன்னும் சில மணிநேரங்கள் தான் உள்ளன. நமது விண்வெளி விஞ்ஞானிகளின் சாதனையை இந்தியாவும், உலக நாடுகளும் மீண்டும் ஒருமுறை காணப் போகிறது’’ எனக் கூறினார்.


Similar News