கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை சென்னையில் 60.48 சதவீதமாக உயர்வு - கடந்த 24 நாட்களில் நிகழ்ந்த மாற்றம்.?

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை சென்னையில் 60.48 சதவீதமாக உயர்வு - கடந்த 24 நாட்களில் நிகழ்ந்த மாற்றம்.?

Update: 2020-07-01 14:11 GMT

சென்னையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60.48 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் ஆர்.காமராஜ் பேசுகையில்,

முதலமைச்சர் என்னை போன்ற அமைச்சர்களை மூன்று மண்டலங்கள் பிரித்து கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பணியாற்ற உத்தரவிட்டார். நாங்கள் 8-ந்தேதி முதல் பணிகள் தொடர்ந்து செய்து வருகிறோம். 8-ந்தேதி அன்று சென்னையில், குணமடைந்தோர் சதவிதம் 50.04 ஆக இருந்தது. இன்று 60.48 சதவீதமாக உயர்ந்துள்ளது

38 சதவீத நபர்கள் தான் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களும் வெகு விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்கள். அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மண்டபத்திலும் நடைபெறும் 40 மருத்துவ முகாம்களை 4,000 பேர் பரிசோதனை செய்து கொள்கிறார்கள். இனிவரும் காலங்களில் தொற்று எண்ணிக்கை வெகுவாக குறையும்.

தமிழகத்தை பொறுத்தவரை அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் கையிருப்பில் இருக்கிறது. நிவாரண தொகையை வீடு வீடாக சென்று தான் வழங்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டார்.

சமூக இடைவெளி, முககவசம் கையுறை அணிந்து செல்ல வேண்டும் என்று பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் அவர்கள் வீடுகளுக்கு சென்று பாதுகாப்பாக வழங்கி வருகிறார்கள். சென்னையை பொறுத்தவரை 90.79 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது, மதுரையில் 82.90 சதவீதம் வழங்கபட்டு விட்டது என்றார்.

Similar News