₹13,200 கோடி மதிப்பில் சென்னை - தூத்துக்குடி புதிய 8 வழிச்சாலை - மத்திய அரசு அதிரடி

₹13,200 கோடி மதிப்பில் சென்னை - தூத்துக்குடி புதிய 8 வழிச்சாலை - மத்திய அரசு அதிரடி

Update: 2019-01-19 09:17 GMT
மத்திய மோடி சர்க்கார் 2022-ஆம் ஆண்டுக்குள் பசுமை வழிச்சாலை திட்டங்களை நிறைவு செய்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தீர்மானித்துள்ளது. இதில் ஒரு பகுதியாக பாரத் மாலா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னை-தூத்துக்குடி இடையிலான பயண தூரம் 100 கிலோமீட்டர் வரை குறையும் வகையில் எட்டு வழி சாலை அமைக்கப்பட உள்ளது. சென்னையிலிருந்து விழுப்புரம் வரை 10 வழி சாலை திட்டமாகவும்; விழுப்புரத்திலிருந்து தஞ்சாவூர் திருச்சி வரை 8 வழி சாலை திட்டமாகவும்; தஞ்சாவூர், திருச்சியிலிருந்து தூத்துக்குடி வரை ஆறு வழி சாலை திட்டமாகவும் இதை ₹13,200 கோடி மதிப்பில் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக அரசு தற்போது இந்த திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளதால், புதிய பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து, மத்திய சுற்றுச்சூழல் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
Input Credits - Thanthi TV

Similar News