ஆடி அமாவாசையில் சென்டிமெண்டாக துவங்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் - பிரதமர் மோடியுடன் ஆளுநர், முதல்வர் மேடையில்

ஆடி அமாவாசையான இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் கோலாகலமாக துவங்க இருக்கிறது துவக்கி வைக்க பிரதமர் மோடி வருகை புரிகிறார்.

Update: 2022-07-28 08:24 GMT

ஆடி அமாவாசையான இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் கோலாகலமாக துவங்க இருக்கிறது துவக்கி வைக்க பிரதமர் மோடி வருகை புரிகிறார்.


44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று கோலாகலமாக துவங்குகின்றன, ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டிக்காக மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் முழு அளவிலான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

இந்தியாவில் முதன்முறையாக நடைபெறும் சேஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க 187 நாடுகளைச் சேர்ந்த 2000 வீர,வீராங்கனைகள் வருகை புரிந்துள்ளனர்.


சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக இன்று மாலை 4:45 மணி அளவில் பிரதமர் மோடி சென்னை வருகிறார். மாலை 5:25 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர் ஐ.என்.எஸ் அடையார் தளத்தில் இறங்கும் அவர் காரில் நேரு விளையாட்டு அரங்கிற்கு செல்கிறார்.

மாலை ஆறு மணிக்கு நடைபெறும் செஸ் போட்டி தொடக்க விழாவில் கலந்து கொண்டு போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் அவருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

Similar News