சிதம்பரம் நடராஜர் கோயில் இன்று மார்கழி ஆருத்ரா தரிசன விழா நடந்தது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்! வைரல் வீடியோ!

சிதம்பரம் நடராஜர் கோயில் இன்று மார்கழி ஆருத்ரா தரிசன விழா நடந்தது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்! வைரல் வீடியோ!

Update: 2020-01-10 12:41 GMT

சிதம்பரம் நடராஜர் கோயில் இன்று மார்கழி ஆருத்ரா தரிசன விழா நடந்தது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.


சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 1 ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைத் தொடர்ந்து தினமும் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடந்தது. பஞ்சமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தது.






இந்நிலையில் நேற்று காலை தேரோட்டம் நடந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமிகள் வைக்கப்பட்டு லட்சார்ச்சனை நடைபெற்றது. அதிகாலையில் நடராஜர், சிவகாமசுந்தரிக்கு ராஜசபை எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் மகா அபிஷேகம் நடைபெற்றது.கடும் பனியையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அபிஷேகத்தை கண்டு களித்தனர்.





இதைத்தொடர்ந்து திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய பூஜையும் நடைபெற்றுபஞ்சமூர்த்திகள் வீதி உலா வந்தது இதன் பின்னர் விழாவின் முக்கிய நிகழ்வாக நான்கு மணியளவில் நடராஜர், சிவகாமசுந்தரி சமேதமாக ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடனம் ஆடியபடியே வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.





இரண்டு மணிக்குள் தரிசன நிகழ்ச்சி நடைபெறும் என சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உறுதி அளித்த தீட்சதர்கள் அதன்படி நடத்தாமல் வழக்கம்போல் 5 மணிக்கு மேல் தரிசனம் நடத்தியதால் அதிகாலையிலிருந்தே கோயிலில் இருந்த பொதுமக்கள் இயற்கை உபாதைகள் மற்றும் குடி தண்ணீர் இன்றி கடும் அவதி அடைந்தனர்.


Similar News