'பா.ஜ.க பேரணி என தெரிந்ததும் முதல்வர் டெல்டா மாவட்டத்திற்கு எஸ்கேப் ஆகிவிட்டார்' - பா.ஜ.க பேரணியில் அண்ணாமலை

பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத தி.மு.க அரசை கண்டித்து அண்ணாமலை தலைமையிலான பா.ஜ.க'வினர் சென்னையில் பேரணி நடத்தி வருகின்றனர்.

Update: 2022-05-31 07:29 GMT

பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத தி.மு.க அரசை கண்டித்து அண்ணாமலை தலைமையிலான பா.ஜ.க'வினர் சென்னையில் பேரணி நடத்தி வருகின்றனர்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி தலைமையிலான அரசு இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை கணிசமாக குறைத்தது. அதனைத் தொடர்ந்து பல மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் விலையை தன்பங்கிற்கு குறைத்து அறிவிப்பை வெளியிட்டனர்.

இந்த நிலையில் தமிழகத்திலும் பெட்ரோல் டீசல் குறை விலையை தி.மு.க அரசு குறைக்க வேண்டும் என குரல்கள் எழுந்த நிலையில் தி.மு.க அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என கெடு விதித்திருந்தார்.

அண்ணாமலை விதித்திருந்த கெடு முடிவடைந்த நிலையில் தி.மு.க அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத காரணத்தினால் என்று தமிழக பா.ஜ.க சார்பில் கோட்டையை நோக்கி பேரணி செல்லும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அறிவிப்பை அடுத்து இன்று காலை 10 மணி அளவில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க'வினர் திரண்டு பேரணி நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர் .அதில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது, 'தி.மு.க அரசு வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ளது. கோட்டையை நோக்கி நாம் வரப் போகிறோம் என்று தெரிந்ததுமே முதல்வர் எஸ்கேப் ஆகிவிட்டார், எஸ்கேப்பாகி டெல்டா மாவட்டம் சென்றுவிட்டார். கடந்த மூன்று நாட்களாக தி.மு.க அரசு உதயநிதிக்கு ஆதரவாக தீர்மானம் போட்டு வருகிறது, அவர்கள் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தவில்லை' என அண்ணாமலை பேசினார்.

Similar News