முதல்வருக்கு கமல்ஹாசன் கோரிக்கை : தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு கேஸை போல இதையும் தட்டி கழிக்காதீர்.!

முதல்வருக்கு கமல்ஹாசன் கோரிக்கை : தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு கேஸை போல இதையும் தட்டி கழிக்காதீர்.!

Update: 2020-06-30 03:12 GMT

சாத்தான்குளம் வழக்கை சிபிஐ-க்கு மாற்றியது குறித்து உலக நாயகன் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார். சாத்தான் குளத்தில் அரசு நிர்ணயித்த நேரத்தை தாண்டி செல்போன் கடை தெரிந்து வைத்திருந்ததால் தந்தை மகன் என இருவரை போலீசார் அழைத்துச் சென்று அடித்து படுகொலை செய்தனர். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

இதுகுறித்து கமலஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் கூறியிருப்பதாவது, சாத்தான்குளம் வழக்கை CBI-க்கு மாற்றி, பொறுப்பை தட்டி கழிக்காதீர்கள் முதல்வரே! குற்றவாளிகள் மேல் IPC 302 கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களை புலனாய்வுத் துறையிடம் ஒப்படையுங்கள்.

CBI விசாரணைக்காக மாற்றப்பட்டு, கிடப்பில் இருக்கும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, குட்கா ஊழல் போன்ற வழக்குகளின் வரிசையில் இதையும் சேர்த்து, மக்கள் மறந்து விடுவார்கள் என காத்திராமல், நீதியைக் காத்திடுங்கள்.காலம் தாழ்த்தப்பட்ட நீதி, அநீதி என தெரிவித்துள்ளார்.

Similar News