புதுசேரி : சூழ்நிலைக்கு ஏற்றார்போல் ஆட்டோவை நடமாடும் பழக்கடையாக மாற்றிய புதுச்சேரி பட்டதாரி.!

புதுசேரி : சூழ்நிலைக்கு ஏற்றார்போல் ஆட்டோவை நடமாடும் பழக்கடையாக மாற்றிய புதுச்சேரி பட்டதாரி.!

Update: 2020-06-12 06:10 GMT

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால் பல்வேறு தரப்பினரும் வேலையின்றி தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதனிடையே ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் குறைந்த அளவிலான பேருந்துகள் இயக்கப்படுகின்றது மேலும் சுற்றுலாப்பயணிகள் வருகை இல்லாததாலும் ஆட்டோ மற்றும் டெம்போக்கள் இயங்கப்படாத காரணத்தால் அதன் ஓட்டுனர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் புதுச்சேரி வம்பாகீரப்பாளையத்தை சேர்த்த ஆட்டோ ஓட்டுநரான பட்டதாரி வேலு என்பவர் வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில் தனது ஆட்டோவை நடமாடும் பழக்கடையாக மாற்றியுள்ளார். புதுச்சேரியில் ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகள் வருகையின்மையால் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகியுள்ளது இதனால் புதுச்சேரி அரசு ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பெருக்க மாற்று ஏற்பாட்டினை செய்து தருமாறு அரசுக்கு வேலு கோரிக்கை வைத்துள்ளார். 

Similar News