ஏன் தினசரி ஓம் மந்திரம் சொல்ல வேண்டும்? அறிவியல் பார்வை.!

ஏன் தினசரி ஓம் மந்திரம் சொல்ல வேண்டும்? அறிவியல் பார்வை.!

Update: 2020-06-12 01:56 GMT

ஓம் என்கிற பிரணவ மந்திரம் "அவும் " என உச்சரிக்கப்பட வேண்டியது. இது மூன்று அடுக்கு ஆழ்நிலையை உணர்த்துவதாக உள்ளது. விழிப்பு நிலை, கனவு நிலை மற்றும் ஆழ்ந்த நிலை . ஓம் என்கிற ஒலி படைப்பின் மூலமாக கருதப்படுகிறது. ஓம் எனும் மந்திரம் உச்சாடனம் செய்கிற போது மிகுந்த ஆற்றல் வளையம் நமக்குள்ளும் வெளியேவும் உருவாகிறது.

இது நம் பண்டைய இந்து மரபில் காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் ஆன்மீக மந்திரம் மட்டுமல்ல இந்த ஒலிக்கென பிரத்யேக உளவியல் நலன்களும் உண்டு.

ஓம் மந்திரத்தை உச்சாடனம் செய்கிற போது அட்ரினலின் அளவு சீராகிறது அதன் மூலம் ஸ்ட்ரெஸின் அளவு குறைவதாக மருத்துவ உலகம் சொல்கிறது. மேலும் இது உணர்வுகளை சமன் செய்து நேர்மறை எண்ணங்களை ஊக்குவிக்கிறது.

அது மட்டுமின்றி குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஓம் மந்திர உச்சாடனை மிகுந்த உறுதுணையாக அமைகிறது. குறிப்பாக அவர்களின் படைப்புத்திறனை அதிகமாக தூண்டுகிறது. அறிவார்ந்த செயல்களை செய்பவர்களாக நேர்மறையான அணுகுமுறை உள்ளவர்களாக வளர ஓம் மந்திர உச்சாடனை உதவுகிறது.

மேலும் உணர்வலைகள் அதிகமாக இருக்கிற நபர் ஓம் உச்சாடனை செய்கிற போது அவர்களின் உணர்வுகள் சமநிலை அடைகிறது. மேலும் இது கோபத்தை குறைத்து, பொறுமையை அதிகரிக்க செய்கிறது

அதுமட்டுமின்றி ஓம் மந்திரத்தை சொல்கிற போது நம் நுரையீரலின் செயல்பாடு தூண்டப்படுகிறது. காரணம் ஓம் உச்சாடனம் சிறந்த மூச்சு பயிற்சிகளுள் ஒன்றாகும்.

ஓம் மந்திரம் மூன்று பாகங்களாக ஒரு மனிதரின் உடலில் செயல்படுகிறது. முதலில் ஒருவர் மந்திர உச்சாடனைக்காக முதுகுத்தண்டை நேராக வைக்கிற போது முதுகுத்தண்டு மேலும் வலுப்பெருகிறது. பின் மந்திரத்தின் முதல் பகுதியான "ஆ "என்ற சப்தம் வயிற்றுபகுதிக்கு கீழ் உருவாகி, பின் "உ" என்கிற சப்தம் நெஞ்சு தொண்டையில் பகுதியில் பிறந்து பின் ம் என்று முடிகிற சப்தம் தலைப்பகுதியில் முடிவதால் அது சார்ந்த இடங்கள் அனைத்தும் நேர்மறை அதிர்வுகளை பெறுகின்றன. இது அந்த சப்தம் எழும் பகுதியில் அமைந்துள்ள அனைத்து உறுப்புகளின் செயல்பாட்டிற்கும் நன்மை பயப்பதாகும்.

முன்பொரு காலத்தில் துறவிகள் அதிக ஆண்டுகள் வாழ்ந்தனர் அதற்கு காரணம் நைட்ரிக் ஆக்ஸைட் உடலில் அதிகரிக்க செய்வது என்று சொல்கின்றனர். உதாரணமாக அதிகாலை சூரிய ஒளி படுமாறு குறிப்பிட்ட யோக முறையில் அமர்ந்து ஓம் மந்திரம் உச்சாடனம் செய்கிற போது சூரிய உதயத்தின் போது வரும் இளம் சூரிய கதிர்கள் உடலில் படுவதால் நைட்ரிக் ஆக்ஸைட் உடலில் அதிகரிப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.

மேலும் இது தனியாக சொல்கிற போது தனி நபருக்கும். கூட்டாக சேர்ந்து பலர் உச்சரிக்க போது அந்த இடத்தில் ஓர் பேராற்றலும் பெரும் அதிர்வலைகளும் எழும்பும். 

Similar News