அகில இந்திய அளவில் ஐ.ஐ.டி மெட்ராஸ் இந்த ஆண்டும் முதலிடம் பிடித்து அபார சாதனை.!

அகில இந்திய அளவில் ஐ.ஐ.டி மெட்ராஸ் இந்த ஆண்டும் முதலிடம் பிடித்து அபார சாதனை.!

Update: 2020-06-12 04:20 GMT

நேற்று வியாழக்கிழமை அறிவிக்கப்பட்ட மனிதவள மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு(என்.ஐ.ஆர்.எஃப்) வெளியிட்ட தரவரிசைப்படி, ஐ.ஐ.டி-மெட்ராஸ் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக நாட்டின் முதலிடம் வகிக்கிறது. இது தவிர, வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் பிரிவில் டெல்லி, பி.ஜி.ஐ. சண்டிகருக்கு அடுத்து 3 வது இடத்தை பிடித்துள்ளது. ஆனால் துரதிஷ்டவசமாக அண்ணா பல்கலைகழகம் 7- ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மொத்தம் 3,771 பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் தரவரிசை செயல்பாட்டில் பங்கேற்றன. தரவரிசை கட்டமைப்பானது, கற்பித்தல், கற்றல் மற்றும் வளங்கள் (டி.எல்.ஆர்), ஆராய்ச்சி மற்றும் தொழில் முறை நடைமுறை (ஆர்.பி.), பட்டமளிப்பு முடிவுகள் (ஜி.ஓ), அவுட்ரீச் மற்றும் உள்ளடக்கம் (ஓ.ஐ) மற்றும் கருத்து (பி.ஆர்) ஆகிய ஐந்து பரந்த பொதுவான அளவீடுகளைக் கொண்டு சிறந்த கல்வி நிறுவனங்களை மதிப்பீடு செய்கிறது. இந்த ஐந்து பரந்த அளவுருக்கள் ஒவ்வொன்றிற்கும் ஒதுக்கப்பட்ட மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் இந்த தர நிலைகள் வழங்கப்படுகின்றன.

ஒட்டுமொத்த தரவரிசையில் முதல் 10 இடங்களில் ஏழு இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐ.ஐ.டி) இடம் பெற்றுள்ளன – முதல் இடத்தில் ஐ.ஐ.டி மெட்ராஸ், இரண்டாம் இடத்தில் ஐ.ஐ.டி டெல்லி, மூன்றாம் இடத்தில் ஐ.ஐ.டி பம்பாய், நான்காம் இடத்தில் ஐ.ஐ.டி கோரக்பூர், 5 ஆம் இடத்தில் ஐ.ஐ.டி கான்பூர், ஆறு மற்றும் 7 ஆம் இடத்தில் ஐ.ஐ.டி குவஹாத்தி மற்றும் ஐ.ஐ.டி ரூர்க்கி. தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இதே போல மருத்துவக் கல்லூரிகளில், எய்ம்ஸ், டெல்லி முதலிடத்தையும், பி.ஜி.ஐ, சண்டிகர் மற்றும் வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி (சி.எம்.சி.) 3 வது இடத்தையும் பிடித்துள்ளதாக மனித வள மேம்பாட்டுத்துறையின் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது.

இருப்பினும், பொறியியல் கல்லூரிகளைப் பொறுத்தவரை இது தமிழகத்திற்கு ஒரு நல்ல செய்தி அல்ல என்றும் பல்கலைக்கழகங்களில் இப்போது சென்னை அண்ணா பொறியியல் பல்கலைகழகம் ஏழாவது இடத்திற்கும், பொறியியல் கல்லூரிகளின் பட்டியலில் ஒன்பதாவது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. இரு பிரிவுகளிலும் ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை நடைமுறை அளவுருக்களில் புள்ளிகளை இழந்து ஐந்து இடங்களுக்கும் பின்னால் தள்ளப்பட்டுள்ளது என்பது வருத்தத்துக்கு உரியதாகும் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை கூறியுள்ளது.

பொறியியல் பல்கலைகழகங்களில் முதல் மூன்று பல்கலைக்கழகங்களாக ஐ.ஐ.எஸ்.சி பெங்களூரு, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜே.என்.யூ) மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (பி.எச்.யூ) வரிசைப் படுத்தப்பட்டுள்ளது. அடுத்த இடங்களை ஐ.ஐ.எம் அகமதாபாத் ஐ.ஐ.எம் பெங்களூரு மற்றும் ஐ.ஐ.எம் கல்கத்தா பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து டெல்லி பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் மிராண்டா கல்லூரி முதலிடத்தைப் பிடித்துள்ளதாகவும், அடுத்த இடங்களை லேடி ஸ்ரீ ராம் மகளிர் கல்லூரி, இந்து கல்லூரி மற்றும் செயின்ட் ஸ்டீபன் கல்லூரி பெற்றுள்ளதாகவும் இந்த அறிவிப்புகள் ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்படும் ஒன்றாகும் என்றும், COVID-19 தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது என்றும் மத்திய கல்வியமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் கூறினார்.

மேலும் கட்டிடக்கலை ஆய்வுகளுக்கான முதல் மூன்று நிறுவனங்கள் ஐ.ஐ.டி கோரக்பூர், ஐ.ஐ.டி ரூர்க்கி மற்றும் காலிகட்டின் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் பிடித்துள்ளது.

முதல் மூன்று சட்டப் பள்ளிகள் - பெங்களூரு தேசிய சட்டப் பள்ளி பல்கலைக்கழகம்; தேசிய சட்ட பல்கலைக்கழகம், புது தில்லி மற்றும் ஹைதராபாத்தின் நல்சார் சட்ட பல்கலைக்கழகம் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல கியூஎஸ் உலக பல்கலைக்கழக தரவரிசை புதன்கிழமை அறிவிக்கப்பட்டது, இதில் டெல்லி மற்றும் பம்பாய் ஆகிய இரண்டு ஐ.ஐ.டி.களும், இந்திய அறிவியல் கழகம் (ஐ.ஐ.எஸ்.சி), பெங்களூரு சில புள்ளிகளை இழந்த போதிலும், முதல் 200 இடங்களில் தங்கள் இடங்களைத் தக்க வைத்துக் கொண்டன. 

https://www.thenewsminute.com/article/iit-madras-ranked-number-one-engineering-institute-india-5th-year-row-126367

Similar News