அமெரிக்காவில் அட்டூழியம் : கொலம்பஸ் மற்றும் பல்வேறு தலைவர்கள் சிலையின் தலை பறித்து சூறையாடி ஏரியில் வீசிய ஆர்ப்பாட்டக்காரர்கள்.!

அமெரிக்காவில் அட்டூழியம் : கொலம்பஸ் மற்றும் பல்வேறு தலைவர்கள் சிலையின் தலை பறித்து சூறையாடி ஏரியில் வீசிய ஆர்ப்பாட்டக்காரர்கள்.!

Update: 2020-06-12 02:42 GMT

13 மற்றும் 14 நூற்றாண்டுகளில் நம் அன்னை பாரதத்தின் செல்வமும், சிறப்பும் ஐரோப்பிய நாடுகள் உட்பட உலகம் முழுவதும் தெரிந்திருந்தது. ஆனால் ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியா எங்கே உள்ளது என்பது தெரியாது. இந்தியாவை கண்டுபிடிக்க ஐரோப்பிய நாடுகள் கப்பல் படையை திரட்டிக் கொண்டு தேட முற்பட்டன. அதன்படி அனுப்பப்பட்டவர் ஸ்பெயின் நாட்டு கப்பல் படை தளபதி கிறிஸ்டோபர் கொலம்பஸ் .

இந்தியாவை கண்டுபிடித்து செல்வ வளங்களை சுரண்ட புறப்பட்ட கொலம்பஸ் 1492 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ந்தேதி அமெரிக்க தீவுகளை கண்டுபிடித்து முதலில் அதைத்தான் இந்தியா என்று நம்பினார். அவர் அங்கு கண்ட பழங்குடி மக்களை இந்தியர்கள் என்று நம்பினார். அதனால் தான் அந்த மக்களுக்கு செவ்விந்தியர்கள் என்று ஆரம்பத்தில் ஐரோப்பியர்கள் பெயர் சூட்டினர்.

எப்படியோ அங்குள்ள செவ்விந்திய கூட்டத்தை கொடூரமாகக் கொன்று அமெரிக்க கண்டத்தை ஐரோப்பியர்கள் வசப்படுத்தி அங்குள்ள தாது வளங்களை சுரண்டி தங்கள் நாடுகளை மிகவும் செழிப்பாக்கிக் கொண்டனர். பிறகு ஸ்பெயினிடமிருந்து இங்கிலாந்து கைப்பற்றி அமெரிக்க தீவுகளை தங்கள் காலனியாதிக்க நாடாக மாற்றியது. அமெரிக்காவில் இப்போது இருக்கும் குடிமக்கள் பிரிட்டிஷ் காரர்களின் வழி வந்த வாரிசுகளே.

மேலும் கொலம்பஸ் அமெரிக்காவை கைப்பற்றிய தினத்தை அமெரிக்கர்கள் திருவிழா போல கொண்டாடி வருவது வழக்கம், கொலம்பஸின் சிலைகள் அமெரிக்காவின் பாஸ்டன், மியாமி, விர்ஜினியா, செயின்ட் பால், மின்னோசெட்டா போன்ற பல நகரங்களில் உள்ளன. கொலம்பஸை பாராட்டி பள்ளி புத்தகங்களிலும் பாடங்கள் உள்ளன.

இந்த நிலையில் சமீபத்தில் போலீசாரால் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட ஜியார்ஜ் பிளாயிட் இறுதி ஊர்வலத்தின் போது அமெரிக்க கறுப்பின மக்களும், அமெரிக்க பூர்வீக குடிகளும் பல இடங்களில் வன்முறையில் இறங்கியதாக தெரிகிறது. அப்போது அமெரிக்காவை அடிமைப்படுத்திய பல தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தியுள்ளனர்.

அப்போது மின்னோஸ்டா மாகாணத்தில் செயன்ட்பால் என்ற இடத்தில் உள்ள 10 அடி உயர கொலம்பஸின் வெண்கல சிலையை போராட்டாக்காரர்கள் இரும்பு கயிறால் கட்டி இழுத்தனர். அப்போது கொலம்பஸ் சிலையின் தலை தனியாக கழன்று விழுந்துள்ளது. தலை இழந்த கொலம்பஸ் சிலையை பார்த்து ஆர்பாட்டக்காரர்கள் ஆரவாரமிட்டனர்.

அதேபோல பாஸ்டன் நகரில் இருந்த கொலம்பஸ் சிலை, மியாமி, விர்ஜினியாவில் இருந்த கொலம்பஸ் சிலைகளை பெயர்த்து எடுத்து அவற்றை அருகில் உள்ள ஏரிகளுக்கு இழுத்து சென்று போராட்டக்காரர்கள் வீசியதாக போலீசார் கூறினர். அதேபோல விர்ஜீநியாவின் ரிச்மன்ட் என்ற இடத்தில் இருந்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜெபர்சன் டேவிஸ் சிலையையும் ஆர்ப்பாட்டக் காரர்கள் உடைத்து விட்டதாக போலீசார் கூறினர்.  

Similar News