அ.தி.மு.க மருது அழகுராஜிடம் குட்டுபட்ட உதயநிதி ஸ்டாலின்!

அ.தி.மு.க மருது அழகுராஜிடம் குட்டுபட்ட உதயநிதி ஸ்டாலின்!

Update: 2020-06-09 10:45 GMT

அவ்வபோது ஏதாவது ட்விட் செய்து யாரிடமாவது வசை வாங்குவது தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கு வழக்கமாகிவிட்டது போலும்.

உதயநிதியின் ட்விட்டரில் கருத்து சொல்கிறேன் பேர்வழி என்கிற பெயரில் ஏதாவது கத்துக்குட்டிதனமாக ட்விட் செய்து பின் அதன் சம்பந்தமாக யாரேனும் திருத்தி சொல்லும் அளவுக்கு போய்க்கொண்டிருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தயை சாடி "போராட்ட களத்திற்க்கு வயதானவர்கள் வர தேவையில்லை வீட்டில் ஓய்வு எடுக்கவும்" என கூறி ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரின் வசவையும் வாங்கிக்கொண்டார் உதயநிதி. மேலும், அவரின் அவ்வபோது அவசரப்படும் வார்த்தைகளால் நடிகரும், அரசியல் பேச்சாளருமான திரு.ராதாரவி அவர்கள் "ஆட்டுப் புழுக்கை" என விமர்சித்துள்ளார்.

தற்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆட்சியை விமர்சிக்கும் விதமாக தெலுங்கானா முதல்வருடன் ஒப்பிட்டு "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கே அவர்களின் வலி, வேதனையை உணரமுடியும் என்பதற்கு @TelanganaCMO அவர்களே உதாரணம். ஆனால் காலைப் பிடிப்பதுதான் கோட்டைக்கான வழி என கூவத்தூர் வழியாக புது ரூட் பிடித்தவர்களுக்கெல்லாம் அவற்றை உணரமுடியாது என்பதற்கு @CMOTamilNadu சான்று #சொல்போதாதுEPS"

என்று ட்விட் செய்தார், அதனை மேற்கோள் காட்டி பதிலளிக்கும் விதமாக அ.தி.மு.க செய்திதொடர்பாளரான மருது அழகுராஜ்

"மக்கள் திலகத்து காலில் விழுந்து, அண்ணாவுக்கு மக்கள் அளித்த ஓட்டுக்கள் மூலம் நாடாள வந்தது உங்க தாத்தா. பிறப்பு சான்றிதழை தகுதியாக வைத்து தலைவர் ஆனது உங்க அப்பா. அதே வழியில் இளைஞர் அணிக்கு இன்று நீங்க. இப்படியான வம்சாவளி கட்சிக்கு எடப்பாடியாரை விமர்சிக்கும் உரிமை உண்டோ. உள்ளம் கூசல"


என்று ட்விட் செய்து மக்கள் திலகம், அண்ணா ஆகிய இருவரால் வந்தது உங்கள் தாத்தா, உங்க தாத்தாவின் பிறப்பான அடையாளத்தால் வந்து உங்க அப்பா, அதன் பின்னேயே நீங்க வந்ததுட்டு எங்கள் முதல்வரை விமர்சிக்க தகுதி உண்டோ என கடுமையாக சாடியுள்ளார், விமர்சகர்களும் "இது தேவையா உதயநிதிக்கு? வாரிசான தகுதியை மட்டும் வைத்து கட்சியை வளைத்து போட்டுவிட்டு இன்று மற்றவர்களை விமர்சிப்பது தேவையா" என்னு சாட ஆரமித்துவிட்டனர்.

வழக்கம்போல தி.மு.க பட்டத்து இளவரசர் கப்சிப்!

Similar News