கணக்கில் சொதப்பி கேலிக்கு ஆளான மத்திய பிரதேச காங்கிரஸ்.!

கணக்கில் சொதப்பி கேலிக்கு ஆளான மத்திய பிரதேச காங்கிரஸ்.!

Update: 2020-06-11 03:12 GMT

மத்திய பிரதேச காங்கிரசின் ட்விட்டர் கணக்கு வழக்கம் போல் சொதப்பலாக பதிவிட்டு நெட்டிசன்களின் கேலிக்கு ஆளாகியுள்ளது.

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகான் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நோயாளிகளில் குணமாவோரின் விகிதம் அதிகரித்து வருவதாகவும் தற்போது 64%க்கும் மேற்பட்ட நோயாளிகளிடம் குணமாவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி மத்திய பிரதேசத்தில் மொத்தம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 9,638, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் 2,688 மற்றும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 414.




 

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 6,536. இது மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 69.52%.; இறப்பு விகிதம் 4 சதவீதம் என்று இருக்கிறது.

மபி காங்கிரஸ் ட்விட்டர் கணக்கு இந்த புள்ளி விவரங்களை‌ தவறாகப் புரிந்து கொண்டு, குணமாவோர் விகிதம் 64%, இறப்பு விகிதம் 4%, மீதி 32% எங்கே போனது என்று கேட்டு சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான அரசை குறை கூற முயன்றது. 32% பேர் பற்றிய தகவல்களை அரசு மறைக்கிறது என்றும் சுட்டிக் காட்ட முயற்சித்தது. அந்த 32% தான் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும்‌ பாதிக்கப்பட்ட 2,688 பேர் என்ற எளிய கணக்கு கூட தெரியாமல் ‌இத்தகைய பதிவிட்ட மபி காங்கிரஸ் சமூக ஊடக பயன்பாட்டாளர்களிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டது.

மேலும் குணமடைவோரின்‌ விகிதம் கிட்டத்தட்ட 70% ஆக இருக்கும் நிலையில் மபி காங்கிரஸ் அதனை 64% ஆக கணக்கிட்டதும் குறிப்பிடத்தக்கது.

மபி காங்கிரஸ் இவ்வாறு முட்டாள்தனமாக பதிவிட்டு மூக்குடைபடுவது முதல் முறையல்ல. கடந்த மாதம் மத்திய அரசு ஜிடிபியில் 10% கொரோனா நிவாரணப் பணிகளுக்காக ஒதுக்கப்படும் என்று‌ அறிவித்த போது, 'இதெல்லாம் போதாது. ₹ 20 லட்சம் கோடி எல்லாம் எந்த மூலைக்கும் காணும்? பிரதமர் ஜிடிபியில் 50% நிதியை ஒதுக்க வேண்டும்' என்று பதிவிட்டிருந்தது.

இவ்வாறு ‌மபி காங்கிரஸ் பதிவிடும் முன் காங்கிரஸ் கட்சி ஜிடிபியில் 5-6% மதிப்பிலான நிவாரணத் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று கேட்டிருந்தது. தங்களது கட்சியின் நிலைப்பாடு என்னவென்றே தெரியாமல் கை போன போக்கில் எதையாவது ‌பதிவிட்டு நெட்டிசன்களின் கேலிக்கு ஆளாவது தான் மத்திய பிரதேச காங்கிரசின் குறிக்கோளோ என்று எண்ணத் தூண்டுகின்றன இந்த சம்பவங்கள்.

Similar News