புதுச்சேரி: நாட்டின் சிறந்த மாநிலமாகவும் நல்லாட்சிக்கு முதன்மை இடத்தில் இருப்பது பெருமிதம் - ஆளுநர் கிரண்பேடி.!

புதுச்சேரி: நாட்டின் சிறந்த மாநிலமாகவும் நல்லாட்சிக்கு முதன்மை இடத்தில் இருப்பது பெருமிதம் - ஆளுநர் கிரண்பேடி.!

Update: 2020-07-25 11:35 GMT

புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றிய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, மனிதவள மேம்பாடு, பொதுச்சுகாதரம், நீதி மற்றும், சட்டம் ஒழுங்கு ஆகியவற்றில் நல்லாட்சிக்கான குறியீட்டை மத்திய அரசு முதல் பாராட்டியுள்ளதாக பெருமிதமடைந்த கிரண்பேடி இதற்காக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை பாராட்டுவதாக தெரிவித்த அவர்.

கொரோனா எதிர்ப்பு போரில் புதுச்சேரி தேசிய அளவில் முன் மாதிரியாக விளங்கியுள்ளதாகவும், 2019-20 ஆண்டில் ஒதுக்கீடு செய்த நிதியில் 93 சதவீத விழுக்காட்டை அரசு செலவு செய்துள்ளதாகவும், புதுச்சேரி மாநிலத்தில் தனிநபர் வருமானம் இந்தாண்டு 5.3 விழுக்காடு உயர்ந்துள்ளதாக தெரிவித்த அவர் தேசிய வேளாண் விளைப்பொருட்கள் சந்தை படுத்தும் மண்டி தென்னிந்தியாவிலே இணைய வசதி செய்துள்ள முதல் விற்பனை மண்டியாகும் என பெருமைப்பட்ட கிரண்பேடி கொரோனா பொது முடக்கதால் பாதிப்பு காரணமாக மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், நாட்டில் உள்ள அனைத்து யூனியன் பிரதேசங்களிலும் மனிதவள மேலாண்மையில் முதல் இடத்தை பெற்றுள்ளதாகவும் தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.


மேலும் புதுச்சேரியில் உள்ள பொறியியல் கல்லூரி தொழில்நுட்ப பல்கைக்கழகமாக விரைவில் செயலடும் என்ற அறிவிப்பையும் வெளியிட்ட கிரண்பேடி, கணினி இணையதளக் குற்றங்களில் இருந்து குழந்தைகள், மற்றும் பெண்களைப்பதுகாத்தல் என்னும் திட்டத்தின் கீழ் இணையதள தடவியல் ஆய்வகப்பயிற்சி மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.

புதுச்சேரி மாநிலத்தில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு இணையதளம் மூலம் தேர்வுகள் நடத்த முதல் முறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக வாகன் மற்றும் சாரதி 4.0 என்ற மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அரசின் அனைத்து நிதி ஆதாரங்களையும் பயன்படுத்தி வறுமையை நீக்கி இவ்வாட்சிப்பரப்பை வளமிக்கதாக்கும் வழிவகைகளை உருவாக்குவதில் இந்த அரசு உறுதியுடன் செயல்பட்டு வருவதாகவும் அரசின் முன் உள்ள அனைத்து சவால்களையும் பேரவை உறுப்பினர்களின் முழு ஒத்துழைப்புடன் இந்த அரசு எதிர்கொண்டு நிலையான வளர்ச்சியை எதிர்வரும் காலங்களில் எட்டும் என உறுதியுடன் நம்புவதாகவும் இந்த கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் ஆக்கப்பூர்வமான விவாதங்களுடன் தங்கள் மேலான பரிந்துரைகளையும், கருத்துக்களையும் இந்த அரசுக்கு வழங்குவார்கள் என்று தான் உறுதியாக நம்புவதாக கிரண்பேடியின் உரையில் தெரிவித்துள்ளார்.

Similar News