செங்கல்பட்டு : கோவில் பூசாரியின் பூணூலை அறுத்து, இருவர் தாக்குதல் - அதிர்ச்சி சம்பவம்.!

செங்கல்பட்டு : கோவில் பூசாரியின் பூணூலை அறுத்து, இருவர் தாக்குதல் - அதிர்ச்சி சம்பவம்.!

Update: 2020-07-30 02:27 GMT

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மதுராந்தகம் வரதராஜ பெருமாள் கோவிலில் பணிபுரியும் பூசாரியின் பூணூல் இரண்டு கிறிஸ்தவர்களால் அறுக்கப்பட்டும் ,அவர் தாக்கப்பட்டதாகவும் அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் செய்தி வெளியாகியுள்ளது.

அக்கோவிலின் தினசரி நடவடிக்கைகளைத் தனது குடும்பத்தாருடன் கவனித்துவரும் கண்ணன் பட்டாச்சார்யா, அன்று வழக்கம்போல் மாலை ஆரத்தியை நடத்திக்கொண்டு இருக்கும்போது இரண்டு நபர்கள் போதை நிலையில் கோவில் கருவறையைப் புகைப்படம் எடுக்க முயற்சினர். இதைக் கண்டித்த பூசாரி மற்றும் அவர்களைத் தடுக்கவந்த குடும்பத்தினரையும் அவர்கள் தாக்கியுள்ளனர். தமிழ்நாட்டில் கோவில் கருவறையைப் புகைப்படம் எடுப்பது குற்றமாகும்.

பூசாரி காவல்நிலையத்தில் புகாரளித்த போதும் காவல்துறை குற்றவாளிகளைக் கைதுசெய்ய முன்வரவில்லை என்று கூறப்படுகின்றது. இந்து முன்னணி மற்றும் அந்தணர் முன்னேற்றக் கழகம் இச்சர்ச்சையை முன்னெடுத்து அந்த பூசாரியைத் தொடர்புகொண்டுள்ளனர். அதன் வழக்கறிஞர் ராஜாளி ஜெயப்பிரகாஷ், பூசாரியை தொடர்புகொண்டு சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க உதவி செய்வதாக உறுதியளித்ததாக முகநூலில் பதிவிட்டுள்ளார். மேலும் காவல்துறையைத் தொடர்புகொண்டு குற்றவாளிகளின் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எச்சரித்துள்ளனர்.

AMK , கண்ணன் பட்டாச்சார்யாக்கு உள்ளூர் வட்டாரங்கள் மூலம் உதவி செய்து அக்குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகளான பேட்ரிக் செல்வம் மற்றும் சகாய நகரைச் சேர்ந்த அந்தோணி இருவரும் தங்கள் வாழ்க்கை பாதிக்கப்படும் என்று வழக்கைத் திரும்பப்பெறுமாறு வேண்டினர்.பெரிய மனது படைத்த பூசாரி வழக்கைத் திரும்பப்பெறுவதாகவும் கடவுளின் முன்பு மன்னிப்பு கோரவேண்டும் என்று கூறினார். அவ்விருவரும் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கடிதமும் வழங்கினர்.

இருப்பினும் அந்தோணி DMK செயற்பாட்டாளர் என்றும் அக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் உலாவருகின்றது அதனைப் பற்றிய முழு விவரம் அறியப்படவில்லை.

மேலும் திராவிடர் கழகத்தின் கீழ் இயங்கும் பெரியார் அமைப்பினர் 2017ல் பன்றிகளுக்கு பூணூல்களைப் போட்டு பிராமணர்களை இழிவுபடுத்தினர், அந்நிகழ்வில் நான்கு பன்றிகள் காயமடைந்து மற்றும் ஒன்று உயிரிழந்துள்ளது. பிராமணர் மற்றும் இந்துக்கள் மீது பெரியாரிஸ்டுகளுக்கு அவ்வளவு வெறுப்பு.

2018-இல் பா.ஜ.கவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டிவிட்டில் பெரியார் சிலைகளைத் தமிழ்நாட்டிலிருந்து அகற்றவேண்டும் என்றார். சென்னையில் பிராமணர்கள் அதிகம் வசிக்கும் இடமான திருவல்லிக்கேணி மற்றும் மைலாப்பூரை சேர்ந்த 15 பிராமணர்களின் பூணூல் பெரியாரைப் பின்பற்றுவோர்களால் அறுக்கப்பட்டது.மேலும் அதில் ஈடுபட்ட நான்கு பேர் பெருமையுடன் கறுப்பு உடை மற்றும் பெரியார் புகைப்படத்துடன் சரணடைந்தனர்.

2015-இல் மைலாப்பூரில் பூசாரி ஒருவர் தனது அன்றாட கோவில் பணியை முடித்துவிட்டு தனியாகச் செல்லும்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவரது பூணூலை அறுத்ததாகக் கூறப்படுகின்றது.மேலும் அவர்கள் பெரியார் இயக்கத்தினை சேர்ந்தவர்கள் என்று பின்னர் கூறப்பட்டது. திராவிடர் விடுதலை கழகத்தின் வழக்கறிஞர், எச்.ராஜா பெரியாரிஸ்ட்களை தூண்டும் வகையில் பெரியாரை அவமதிக்கிறார் என்றார். அவ்வழக்கறிஞர் மேல் கூறப்பட்ட இரண்டு சம்பவத்திலும் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பூணூல்களை அறுப்பது போன்ற சம்பவங்கள் பெரியார் காலத்தில் கேள்வி கேட்கப்படாமல் போனது ஆனால் இப்போது இவ்வகையான செயல்கள் சமூக ஊடகங்களின் சக்தியால் வன்மையாக கண்டிக்கப்படுகின்றன. இக்குறிப்பிட்டசம்பவம் பெரியாரிஸ்டுகளை வழிக்குக் கொண்டுவர சட்டரீதியான நடவடிக்கையும் ஒரு வழி என்பதைக் காட்டுகிறது.

source: https://www.hindupost.in/dharma-religion/temple-priest-assaulted-sacred-thread-cut-tn/

Similar News