ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புக்களை இந்தியாவில் உருவாக்க திட்டமிடும் அமேசான் நிறுவனம் - மாபெரும் திட்டம்.!

ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புக்களை இந்தியாவில் உருவாக்க திட்டமிடும் அமேசான் நிறுவனம் - மாபெரும் திட்டம்.!

Update: 2020-07-26 04:18 GMT

பண்டிகை காலத்திற்கு முன்னதாக 10 புதிய கிடங்குகளை திறக்க ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளதால், இந்தியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய கிடங்களுடன் சேர்த்தால், அமேஸானுக்கு மொத்தம் 60 கிடங்குகள், 15 மாநிலங்களில், 32 மில்லியன் கன அடி அளவுள்ள இடங்களில் சேமிப்பு கிடங்குகளை கொண்டிருக்கும் என்று இந்நிறுவனம், வியாழக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த பூர்த்திமையங்கள் அல்லது கிடங்குகள் டெல்லி, மும்பை, பெங்களூர், பாட்னா, லக்னோ, கொல்கத்தா, ஹைதராபாத், சென்னை, லூதியானா மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் அமைக்கப்படும். இவை 100 கால்பந்து மைதானங்களின் நிலப்பரப்பை விட அதிகமாகும்.

"இந்த 60 க்கு மேற்பட்ட பூர்த்திமையங்கள் மற்றும் விரிவாக்கப்பட்ட நெட்வொர்க்குடன், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை தர காத்துக்கொண்டிருக்கிறோம்" என்று அமேசான் இந்தியாவின் துணைத்தலைவர் அகில் சக்சேனா கூறியுள்ளார்.

"உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்திற்கான எங்கள் முதலீடு, வாடிக்கையாளர்களுக்கு பரந்த அளவிளான தயாரிப்புகளை வழங்கவும், பேக்கேஜிங், போக்குவரத்து மற்றும் தளவாடங்கள் போன்ற வணிகங்களுக்கும் உதவியாக இருக்கும்" என்று சக்சேனா கூறியுள்ளார். மேலும் இந்த விரிவாக்கமானது வாடிக்கையாளர்களுக்கு வேகமான மற்றும் நிலையான அனுபவத்தை வழங்கும் வகையில் இருக்கும் என்று அமேசான் இந்தியா தெரிவித்துள்ளது.

source:https://swarajyamag.com/insta/amazon-to-create-thousands-of-job-opportunities-in-india-as-it-plans-to-expand-warehouse-network

Similar News