புதுச்சேரி: சட்டப்பேரவையில் தாக்கல் செய்த பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளித்த துணைநிலை ஆளுநர்!

புதுச்சேரி: சட்டப்பேரவையில் தாக்கல் செய்த பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளித்த துணைநிலை ஆளுநர்!

Update: 2020-07-23 11:45 GMT

புதுச்சேரியில் கடந்த 20-ஆம் தேதி ஆளுநர் உரையும் அதைத்தொடர்ந்து பட்ஜெட் தாக்கலாவதாக இருந்தது. ஆனால் 19ம் தேதி இரவு சட்டப்பேரவை கூட்டத்தை மற்றொரு நாள் தள்ளி வைக்க துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முதல்வர் நாராயணசாமிக்கு கடிதம் அனுப்பினார். ஏனெனில் பட்ஜெட் தொடர்பான கோப்பு தனக்கு வரவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து ஆளுநரும், முதல்வரும் மாறி, மாறி கடிதம் அனுப்பினர். ஆளுநர் கிரண்பேடி சட்டப்பேரவைக்கு உரையாற்ற வரவில்லை. ஆனால் 20-ஆம் தேதியன்று பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார்.


அதைத்தொடர்ந்து சட்ட விதிகளின் படி பட்ஜெட் கோப்புகள் என்னிடம் அனுப்பப்படவில்லை. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்கள் சம்பளம், செலவு, ஓய்வூதியம் போன்றவை அடுத்த மாதம் பாதிக்கப்படும் என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்திருந்தார்.

இதனிடையே ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், புதுச்சேரி சட்டப்பேரவைக்கு முன் வருடாந்திர நிதிநிலை அறிக்கை மற்றும் மானியங்களுக்கான கோரிக்கை வழங்குவதற்கான ஒப்புதல் கோரும் உத்தேச திட்டம் புதுச்சேரியின் நிதித் துறையிலிருந்து (21.7.2020) மாலை முதலமைச்சர் மூலம் பெறப்பட்டது. துணைநிலை ஆளுநர் 24.7.2020 அன்று காலை 09.30 மணிக்கு சட்டமன்ற சபையில் உரையாற்றுவதற்கான அழைப்பு கடிதமும் முதலமைச்சர் மற்றும் சபாநாயகர் ஆகியோரிடமிருந்து (22.7.2020) பெறப்பட்டது.


சட்ட சபையில் உரையாற்றுவதற்கான அழைப்பை துணைநிலை ஆளுநர் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும். உள்துறை அமைச்சகம் வழங்கிய ஒப்புதலின் அடிப்படையில் சட்டமன்றத்தின் முன் வருடாந்திர நிதி அறிக்கை மற்றும் மானியங்களுக்கான கோரிக்கை ஆகியவற்றிற்கான தனது பரிந்துரையை துணை நிலை ஆளுநர் தெரிவித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News