சீனாவில் திறக்கப்பட்ட தியேட்டர்கள் - மக்கள் மகிழ்ச்சி!

சீனாவில் திறக்கப்பட்ட தியேட்டர்கள் - மக்கள் மகிழ்ச்சி!

Update: 2020-07-22 12:39 GMT

கொரோனா காரணத்தால் சீனாவில் கடந்த ஜனவரியில் மூடப்பட்ட திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ்க்கு பலி எண்ணிக்கை ஆறு லட்சத்திற்கும் மேல் கடந்துள்ளது.இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 11 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவில் தொடங்கினாலும் மார்ச் முதல் குறைவான பாதிப்பே அங்கு உள்ளது. இதனால் சீனாவின் ஷாங்காய் உள்ளிட்ட சில நகரங்களில் ஜனவரி மாதத்துக்குப் பிறகு தற்போது திரையரங்குகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

இதிலிருந்து மீண்டு வந்த சீனா தற்போது கடைகள் என திறக்கப்பட்டு இருக்கின்றன. மக்கள் தனது சாதாரண வாழ்க்கையை வாழ தொடங்கிவிட்டன.

மீண்டும் திறக்கப்பட்டதினால் பல நடவடிக்கைகளும் மேற்கொண்டு,ஒரு இருக்கை விட்டு மற்றொரு இருக்கையில் தான் ரசிகர்கள் அமரவேண்டும். படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

எனவே சீனாவின் தலைநகரான பீஜிங்கில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படவில்லை. ஜூன் மாதம் கொரோனா தாக்கம் வந்ததால் அங்கே திறக்கப்படாமல் இருக்கிறது.

இதனை அடுத்து மக்கள் சமூக இடைவெளி உடனே மக்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர்.

Similar News