தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டது - ஊடகச் சுதந்திரம் பறிக்கப்பட்டது தி.மு.க ஆட்சியில் தான் : கருணாநிதி கலந்து கொண்ட மேடையில் நடிகர் அஜித் உடைத்த இரகசியம்!

தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டது - ஊடகச் சுதந்திரம் பறிக்கப்பட்டது தி.மு.க ஆட்சியில் தான் : கருணாநிதி கலந்து கொண்ட மேடையில் நடிகர் அஜித் உடைத்த இரகசியம்!

Update: 2020-07-21 05:18 GMT

ஊடகச்சுதந்திரம் பறிக்கப்பட்டது திமுக ஆட்சியில் தான் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் பேசிய அவர், ஊடகச் சுதந்திரம் பறிக்கப்பட்டது திமுக ஆட்சியில் தான், தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டது பத்திரிகை சுதந்திரம் முடக்கப்பட்டது எல்லாம் திமுக ஆட்சியில் தான்.

திரைத்துறையிலும் சரி பத்திரிகை துறையிலும் சரி திமுக தான் தங்கள் அதிகாரத்தை செயல்படுத்தியது. அதனால் தான் நடிகர் அஜித் அன்றைய திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்ட மேடையில் வருத்தம் தெரிவித்தார்.

ஆனால் அதிமுக அப்படி கிடையாது ஜனநாயகத்தை மதிக்கும் பத்திரிகையாளரை போற்றுவோம். ஊடகத் துறையினருக்கு மத்தியஅரசு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் செயல்பட்டால் நிச்சயமாக உங்கள் நலனுக்காக நாங்கள் துணை நிற்போம். தமிழக அரசு அழுத்தம் கொடுக்கும்.

ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவ மாணவர் மரணம் குறித்து தற்போது தான் தகவல்கள் வெளிவந்துள்ளன. முறையான விசாரணை நடைபெற்று வருகிறது.

பெரியார் சிலை மட்டுமல்ல தமிழகத்தில் மறைந்த தலைவர்களின் சிலை எதுவாக இருந்தாலும் அதனை அவமானப்படுத்தும் விதத்தில் செயல்பட்டால் சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Similar News