கொரோனா தடுப்பு பணியில் மற்ற நாடுகளை விட நாம் சிறப்பாக செயல்படுகிறோம் - அமைச்சர் ஹர்ஷவர்தன்.!

கொரோனா தடுப்பு பணியில் மற்ற நாடுகளை விட நாம் சிறப்பாக செயல்படுகிறோம் - அமைச்சர் ஹர்ஷவர்தன்.!

Update: 2020-07-16 08:40 GMT

இந்தியாவில் அதிகமாக மக்கள் தொகை இருந்தாலும் மற்ற நாடுகளை விட கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்படுகிறோம் என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவால் 9 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 24,915 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் குணம் அடைந்துள்ளனர். இதன் விகிதம் 63.25 சதவீதமாக அதிகரித்து உள்ளது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள ராஜகுமாரி அம்ரித் கவுர் கட்டிடத்தை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அஷ்வினி சவுபேயும் கலந்துகொண்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியது: நம் நாட்டில் அதிக மக்கள் தொகை இருந்தாலும் ஒரு தடுப்பு நடவடிக்கையில் மற்ற நாடுகளை விட நாம் சிறப்பாக செயல்படுகிறோம். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறப்பவர்கள் விகிதம் 2.57 சதவீதம் மற்றும் குணமடைந்தவர்கள் விகிதம் 63 63.25 சதவீதம் ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.  

Similar News