இந்திய எல்லையில் இருந்து படைகளை அமைதியாக 'வாபஸ்' பெற சீனாவுக்கு எதிராக அமெரிக்காவில் தீர்மானம்.!

இந்திய எல்லையில் இருந்து படைகளை அமைதியாக 'வாபஸ்' பெற சீனாவுக்கு எதிராக அமெரிக்காவில் தீர்மானம்.!

Update: 2020-07-23 10:04 GMT

இந்திய எல்லை பகுதியில் இருந்து சீனா அமைதியான முறையில் படைகளை 'வாபஸ்' பெறவேண்டும் என்று அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கிழக்கு எல்லையில் கடந்த மாதம் 15ஆம் தேதி சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனால் எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவுகிறது. இப்பிரச்சினையை தீர்க்க இந்தியா சீனா இராணுவங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதன்படி இருதரப்பு எல்லையில் இருந்து படைகளை விளங்கி வருகின்றன ஆனால் சீனா முழுமையாக வாசிக்கவில்லை.

இந்தியா எல்லையில் சீனா வாலாட்டி வருவதை அமெரிக்க கடுமையாக கண்டித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஆளும் குடியரசு கட்சி மற்றும் எதிர்க்கட்சி இணைந்து தேசிய பாதுகாப்பு அங்கீகாரம் பெற்ற பின் புதிய திருத்தத்தை செய்துள்ளனர். அதன்படி இந்திய எல்லையிலிருந்து அமைதியான முறையில் தனது படைகளை வாபஸ் பெறவேண்டும் இப்பிரச்சனையில் தூதரக அளவிலான பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் தவிர ராணுவத்தின் மூலம் அல்ல என்று கூறப்பட்டுள்ளது.

சீனாவுக்கு எதிரான இந்த தீர்மானம் கொண்டு வர முக்கிய காரணமாக இருந்தவர் இந்திய வம்சாவளி உறுப்பினரான இராஜாகிருஷ்ண மூர்த்தி. இவர் இது குறித்துக் கூறியது, இந்தியா மீதான தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது இல்லை பிரச்சினையும் இருதரப்பு அமைதியான முறையில் தீர்வு காண்பதன் மூலம் இந்தியா பசுபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு தன்மை மேலும் ஏற்படும் என்றார்.

மேலும் சீனா பல வகையில் இந்தியாக்கு தொல்லை கொடுத்து வருவதாகவும் இப்பிரச்சினை இப்போதே விட்டு விடுங்கள் இல்லை என்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

Similar News