பிக்பாஸ் ரேஷ்மா பசுபதியுடன் கதாநாயகனாக களமிறங்கும் பிரேம்ஜி - என்ன கொடும சார்.!

பிக்பாஸ் ரேஷ்மா பசுபதியுடன் கதாநாயகனாக களமிறங்கும் பிரேம்ஜி - என்ன கொடும சார்.!

Update: 2020-07-23 12:27 GMT

பிரேம்ஜி பல படங்களில் துணை நடிகராக நடித்து இருக்கிறார். அடுத்து தற்போது கதாநாயகனாக அவதாரம் எடுத்திருக்கிறார். பிரேம்ஜி மற்றும் ரேஷ்மா பசுபதி நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் போஸ்ட்ரை மாதவன் அவர்கள் வெளியிட்டுள்ளார். 2017ம் ஆண்டு 'ஒரு கிடாயின் கருணை மனு' என்ற படத்தை இயக்கி பிரபலமானவர் இயக்குநர் சுரேஷ் சங்கையா இந்தப் படத்தையும் இயக்குகிறார். இந்த படம் விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று பல விருதுகளையும் அள்ளி குவித்தது.

தற்போது இவர் அடுத்த படத்தினை குறித்த டைட்டிலை வெளியிட்டுள்ளார். 'சத்திய சோதனை' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் நடிகரும் இசையமைப்பாளருமான, பிரேம்ஜி, இவருக்கு ஜோடியாக பிக்பாஸ் பிரபலம் ரேஷ்மா பசுபதி நடிக்கவுள்ளார். மேலும் பல்வேறு துணை நடிகர்கள் நடிக்க உள்ளனர். சத்திய சோதனை என்பது தேசதந்தை மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை குறிப்பிடும் நூலாகும்.

இந்த டைட்டிலுடன் உருவாகும் இந்த படமும் நகைச்சுவையுடன் நல்ல சமூக கருத்துக்களையும் கூறும் படமாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். டைட்டிலுடன் கூடிய போஸ்ட்ரை நடிகர் மாதவன் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Similar News