ஊடகங்களின் பின்புலத்தில் தி.மு.க! தி.மு.க. பின்புலத்தில் கிறிஸ்தவ மிஷினரிகள்? உண்மைகளை வெளிக்கொண்டுவரும் மிஷன் காளி இயக்கம்.!

ஊடகங்களின் பின்புலத்தில் தி.மு.க! தி.மு.க. பின்புலத்தில் கிறிஸ்தவ மிஷினரிகள்? உண்மைகளை வெளிக்கொண்டுவரும் மிஷன் காளி இயக்கம்.!

Update: 2020-07-23 12:53 GMT

தமிழக பொது ஊடகங்களை திரைமறைவில் இருந்து தி.மு.க. கட்டுப்படுத்தி வருகிறது என்று பிரபல சமூக ஆர்வலர் மாரிதாஸ் சில தினங்களுக்கு முன்பு ஆதாரங்களுடன் வீடியோக்களை வெளியிட்டார். இந்த வீடியோ இந்திய ஊடகவியலாளர்களுக்கு மத்தியில் பெரும் புகைச்சலை கிளப்பி வருகிறது. தி.மு.க. பிடியிலிருந்து ஊடகங்களை விடுவிக்கவேண்டும் என்று சமூக வலைதளங்களில் மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க, சில தினங்களுக்கு முன்பு ஒன்றிணைவோம் திட்டத்தின் கீழ் தனது நிர்வாகிகளை சந்தித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசினார். அப்போது வேடசந்தூர் தொகுதியில் உள்ள குஜிலியம்பாறை தி.மு.க. ஒன்றிய செயலாளர் சீனிவாசன், 'தலைவா, ஆரியர்கள் விநாயகர் மற்றும் விநாயகர் சதுர்த்தியை அவர்களுக்கு சொந்தமானதாக கருதுகிறார்கள். நாங்களும் கடவுளை வணங்குபவர்கள் தான். இதனால் அவர்களுக்குப் போட்டியாக விநாயகர் சதுர்த்தியின்போது திராவிட விநாயகரை வைத்து நாங்கள் வழிபட விரும்புகிறோம். அதற்கும் உங்கள் அனுமதி தேவை' என்ற ரீதியில் பேசிய ஒரு வீடியோ வெளியாகி வைரலானது.

திராவிட சித்தாந்தம் என்ற கொள்கையே கிறிஸ்துவ மிஷனரிகள் உருவாக்கியது தான். இந்து மதத்தை அழிக்கவேண்டும் என்று உருவாக்கப்பட்ட இந்த சித்தாந்ததில்தான் தி.மு.க. தனது அரசியல் பயணத்தை நடத்தி வருகிறது. அப்படி இருக்கும்போது எங்கிருந்து வந்தது திராவிட விநாயகர்?

50 ஆண்டுகளுக்கும் மேலாக விநாயகரை வந்தேறி கடவுள் என்று சொல்லிவிட்டு இப்போது விநாயகர்சதுர்த்தி கொண்டாடவேண்டும் என்று தி.மு.க. அந்தர் பல்டி அடிக்க என்ன காரணம்? ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தியின் போதும் விநாயகர் உருவ சிலையை உடைத்து திராவிட இயக்கத்தினருக்கு வழக்கமான விஷயமாயிற்றே இப்போது எங்கிருந்து வந்தது திடீர் பாசம்? என்று இந்து மத ஆர்வலர்கள் தி.மு.க. வை வறுத்தெடுத்து வருகின்றனர். இதுபற்றி விரிவாக தெரிந்துகொள்ள இந்து முன்னணியின் சென்னை மாநகர தலைவர் இளங்கோவனிடம் 'மிஷன் காளி' இயக்கம் சார்பாக பேசினர். அவர் நமக்கு மிஷனரிகளோடு தி.மு.க. நடத்திய அரசியலை விளக்கினார்.

இளங்கோவன் அவர்கள் கூறும்போது 'விநாயகர் சதுர்த்தி மட்டுமல்ல. வேறு எந்த ஒரு இந்து கடவுளைப் பற்றியும் பேசுவதற்கு தி.மு.க விற்கு அருகதை கிடையாது. காரணம் தி.மு.க. வின் வரலாறு இந்துமத எதிர்ப்பினால் கட்டமைக்கப்பட்டது. அந்த காலத்தில் இந்தியாவைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் இரண்டு விஷயத்தில் குறியாக இருந்தனர். ஒன்று இந்துக்களை மதம் மாற்ற வேண்டும். மற்றொன்று இந்துக்கள் ஒற்றுமையாகி விடக்கூடாது.

இந்த இரண்டு குறிக்கோளை நிறைவேற்றிக்கொள்ள கிறிஸ்தவ மிஷனரிகளால் உருவாக்கப்பட்டது தான் ஆரிய திராவிட இனப் பிரிவினை வாதம். இந்த போலி ஆரிய-திராவிட பிரிவினையை பயன்படுத்தி தமிழகத்தில் பெருமளவு மதம் மாற்றப் பணிகளில் ஈடுபட்டவன் ராபர்ட் கால்டுவெல் என்ற கிறிஸ்துவ மிஷினரி. ஆக கிறிஸ்தவ மிஷனரிகளால் உருவாக்கப்பட்ட திராவிட சித்தாந்தத்தையும், ராபர்ட் கால்டுவெல் போன்ற மிஷனரிகளையும் பின்பற்றித்தான் தி.மு.க. இத்தனை ஆண்டு கால அரசியல் நடத்தி வருகிறது.

அதேபோல கிறிஸ்துவ மதமாற்றம், தேசப்பிரிவினை ஆகிய இரண்டு முக்கியமான மிஷனரி அம்சங்களை தி.மு.க. இத்தனை ஆண்டுகாலம் தெளிவாக பின்பற்றி வந்துள்ளதுஎன்பதை வரலாற்றைப் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும். அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடு காடு' என்று தேசப் பிரிவினையால் குரல் கொடுத்தது திராவிட இயக்கம்.

அடுத்து பகுத்தறிவு என்ற பெயரில் இந்து மதத்தையும் இந்து தெய்வங்களையும் இந்து சம்பிரதாயங்களையும் மட்டுமே குறிவைத்து கொச்சைப்படுத்தும் இந்த கும்பல். ஆனால் ரம்ஜானுக்கு காய்ச்சும் கஞ்சியை திகவினர் குடிப்பார்கள், கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்டு கேக் வெட்டி கொண்டாடி மகிழ்வார்கள்.

இந்துமத பண்டிகையான தீபாவளி, விநாயகர் சதுர்த்தி ஆகியவற்றுக்கு வாழ்த்து தெரிவிக்க மாட்டார்கள். அதைவிட இந்துக்களின் பண்டிகையான பொங்கலை மதசார்பற்ற பண்டிகையாகவும், இந்து தமிழ் புத்தாண்டான சித்திரை 1ஐ மொத்தமாக நீக்கிவிட்டு அதற்கு பதிலாக சம்பந்தமே இல்லாமல் ஒருநாளை தமிழர்ப் புத்தாண்டாக அறிவித்த துரோகம் செய்த கட்சி திமுக. காரணம் அப்போது தான் பூர்வகுடி இந்துக்களான தமிழர்களை மதம் அற்றவர்களாக சித்தரிக்க முடியும். பிறகு அவர்களை மிஷனரிகளின் மதமாற்ற எளிதாக இருக்கும்.

அவ்வளவு ஏன்? இந்து புலவரான திருவள்ளுவர் ஒரு கிறிஸ்துவர் என்று கிறிஸ்தவ மிஷனரிகளால் எழுதப்பட்ட ஒரு போலியான ஆய்வுக் கட்டுரைக்கு திமுக ஆதரவு கொடுத்துள்ளது.

தற்போது கூட சமூக வலைதளங்களில் கருப்பர் கூட்டம், யூ டூ புரூட்டஸ் போன்ற பெயர்களில் திகமற்றும் பெரியாரிஸ்டுகள் இந்து மதத்தையும், விநாயகர், முருகர் போன்ற இந்து தெய்வங்களையும் மிகக்கேவலமாக சித்தரித்து வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த இயக்கத்தின் ஒட்டுமொத்த அஜெண்டாவை பார்த்தால் ஒன்று புரியும். எந்த விதத்திலும் இந்தியா ஒன்று பட்டு விடக்கூடாது. எந்த விதத்திலும் இந்துக்கள் ஒன்று பட்டு விடக் கூடாது என்பதுதான் அது. இந்த அஜன்டா அப்படியே இந்தியாவைக் கைப்பற்றிய பிரிட்டிஷ் மிஷனரிகளின் அஜண்டாவோடு ஒத்துப் போகிறது.

சரி, இப்போது திடீரென்று 'திராவிட விநாயகர்' என்ற கருத்தை முன் வைக்க என்ன காரணம்?

அதாவது, திமுக என்னதான் விஷமப் பிரச்சாரம் செய்தாலும் தமிழக மக்களின் வாழ்விலிருந்து விநாயகப் பெருமானை மட்டும் அவர்களால் நீக்கவே முடியவில்லை. இவர்கள் பிள்ளையாரைப் போட்டு தெருவில் உடைத்த பிறகுதான் தெருவுக்கு தெரு பிள்ளையாரை வைத்து வழிபடும் மரபு தமிழக இந்துக்களிடம் அதிகரித்தது.

இவை அனைத்தையும் விட 'இந்து முன்னணியின்' விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் இந்துக்களை பெருமளவு ஒன்று திரட்டி விட்டது.

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை ஒரு பொது விழாவாக முதன்முதலில் முன்னெடுத்தது சுப்பிரமணிய பாரதியார்.மகாராஷ்டிராவில் இந்துக்களை ஒன்றிணைத்து ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராட வைப்பதற்கு விநாயகர் சதுர்த்தி விழாவை பயன்படுத்தினால் பால கங்காதர அதைப் பின்பற்றி தமிழகத்திலும் இந்துக்களை ஒன்றிணைத்து ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்குஅதைப் பின்பற்றி தமிழகத்திலும் இந்துக்களை ஒன்றிணைத்து ஆங்கிலேய மிஷனரி ஏகாதிபத்தியத்திற்கு எதிராக திருப்ப பாரதியார் விநாயகர் சதுர்த்தியை பயன்படுத்தினார்.

பாரதியாருக்கு பிறகு விநாயகர் சதுர்த்தி விழா ஒரு பொது விழாவாக நடப்பது நின்றுவிட்டது.இதற்கிடையே இந்தியா சுதந்திரம் அடைந்ததும் தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆட்சி மலர்ந்தது. அப்போதிலிருந்து தொடர்ச்சியாக ஏற்கனவே சொன்னது போல திராவிட கட்சிகள்தேசப் பிரிவினை, இந்து மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி, இந்து மதத்தை அவமானப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

எப்படி ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக விநாயகர் சதுர்த்தி பயன்படுத்தப்பட்டதோ, அதேபோல மிஷனரி திராவிட கட்சிகளின் அராஜகத்திற்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி தேச பக்தியையும் தெய்வ பக்தியும் ஊட்ட 1983 ஆம் ஆண்டு வீரத்துறவி ராமகோபாலன் அவர்களால் விநாயகர் சதுர்த்தி தொடங்கப்பட்டது.

அப்போது ஒரே ஒரு பிள்ளையார் திருவல்லிக்கேணியில் வைக்கப்பட்டது.அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு ஆண்டும் பொது இடத்தில் இந்து முன்னணி சார்பாக வைக்கப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.அந்த சமயத்தில் திமுக ஆட்சியில் இருந்தபோது விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த விடக்கூடாது என்பதற்காக பல சதிகள் செய்யப்பட்டன.

ஒரு முறை திருவல்லிக்கேணியில் நடந்த கலவரத்தில் 4 இந்து முன்னணி பிரமுகர்கள் உயிரிழந்தனர்.இப்படி கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக களத்தில் உழைத்து இந்தப் பிள்ளையார் சதுர்த்தியை வெற்றிகரமாக இந்து முன்னணி நடத்தி வருகிறது.

இன்று சுமார் ஒன்றே கால் லட்சம் ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தியின் போதும் தமிழகம் முழுவதும் வைக்கப்படுகின்றன. இவற்றை சுமார் 32,000 ஊர்வலங்கள் மூலம் கரைக்கவும் ஏற்பாடு செய்யப்படுகின்றது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் இதன் மூலம் கூடும் மக்களின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடியை எட்டும் என்று கூறலாம்.

இப்படி ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக விநாயகர் சதுர்த்தியை வளர்த்துள்ளது இந்து முன்னணி.

இப்போது திராவிட இயக்கம் என்ன செய்யும்? இந்துக்கள் விநாயகர் சதுர்த்தி மூலம் ஒன்று திரண்டு விட்டனர். இனி நேரடியாக விநாயகரை வடநாட்டு கடவுள் என்று எதிர்த்தால் இந்துக்களை பிரிக்க முடியாது. ஆனால் அதற்கு பதிலாக புதுக் குழப்பத்தை விநாயகர் விவகாரத்தில் ஏற்படுத்த முடிவு செய்துள்ளனர்.

எப்படி வடநாட்டு சிவன் வேறு தென்னாட்டு சிவன் வேறு, வடநாட்டு விஷ்ணு வேறு தென்னாட்டு விஷ்ணு வேறு, வடநாட்டு கார்த்திகேயன் வேறு தென்னாட்டு முருகன் வேறு என்று விஷமப் பிரச்சாரம் செய்து இந்துக்களை குழப்பினார்களோ அதேபோல விநாயகர் விவகாரத்திலும் குழப்ப முடிவு செய்துள்ளனர்.

அதன் எதிரொலி தான் திராவிட விநாயகர். இன்னும் கொஞ்ச காலத்தில் திராவிட விநாயகர் என்பவர் திராவிடர்களின் கடவுள். அவர்களை ஆரியர்கள் திருடி ஆரிய விநாயகராக மாற்றி விட்டனர் என்று புலம்புவார்கள்.

இந்துக்களை ஒட்டுமொத்தமாக இளிச்ச வாயன்கள் என்று நினைத்துதான் திமுகவிலிருந்து இதுபோன்ற குரல்கள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஆனால் மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. மிஷனரிகளின் பின்புலத்தில் இயங்கிவரும் திமுகவின் சூழ்ச்சியை இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து இந்து ஒற்றுமை சக்தியை வலிமைப்படுத்த வேண்டும்.' என்று முடித்தார்.


Similar News