சீனாவை கண்டித்து கனடாவில் தீவிர போராட்டம் : இந்திய வம்சாவளி சேர்ந்தோர் உள்பட பல அமைப்புகள் பங்கேற்பு.!

சீனாவை கண்டித்து கனடாவில் தீவிர போராட்டம் : இந்திய வம்சாவளி சேர்ந்தோர் உள்பட பல அமைப்புகள் பங்கேற்பு.!

Update: 2020-07-27 08:01 GMT

சீனா நாட்டின் ஹவாய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்ஷோ. இவரை அமெரிக்காவின் வாரண்ட் மூலம் 2018 ஆம் ஆண்டு கனடா அரசு கைது செய்துள்ளது. இதனால் சீனாவுக்கும் கனடாவுக்கும் இடையே பிரச்சினைகள் அதிகரிக்க துவங்கியது. இந்த கைதுக்கு பின்பு உளவு பார்த்த குற்றசாட்டை கொண்டு கனடாவின் முன்னாள் தூதரக அதிகாரியான மைக்கேல் கோவ்ரி மற்றும் தொழிலதிபர்கள் மைக்கேல் ஸ்பேவர் ஆகிய இருவரையும் சீனா அரசு கைது செய்துள்ளது.

தற்போது சீனா உடைய இந்த செயலை கண்டித்தும் மற்றும் சீனா அரசின் கொள்கையை கண்டித்தும் கனடாவில் போராட்டங்கள் நடந்து வருகிறது.இந்நிலையில் கனடாவில் உள்ள வான்கூவரில் இருக்கும் சீனா தூதரகம் முன்பு நேற்று தீவிர போராட்டம் நடந்துள்ளது.

இந்த போராட்டத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள், கனடா திபெத் அமைப்பு மற்றும் திபெத்திய சமூகம், கனடா மற்றும் இந்திய அமைப்பு நண்பர்கள், ஜனநாயகம் மற்றும் மனித உரிமை அமைப்பு உள்பட பல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று சீனாவை கண்டித்து முழக்கம் எழுப்பியுள்ளனர்.

மேலும், கொரோனா வைரஸ் காரணத்தினால் ஒவ்வொரு அமைப்பிலிருந்து 50 நபர்களுக்கு மட்டும் போராட்டத்தில் பங்கேற்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.  

Similar News