நாங்கள் சீனா பக்கம் இருப்பதாக கூறுவது ரொம்ப.. ரொம்ப அபத்தம்: சொல்லுகிறது பாகிஸ்தான் !

நாங்கள் சீனா பக்கம் இருப்பதாக கூறுவது ரொம்ப.. ரொம்ப அபத்தம்: சொல்லுகிறது பாகிஸ்தான் !

Update: 2020-07-03 04:19 GMT

சீன - இந்திய எல்லைப்பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகின்றது. இருநாடுகளும் லடாக்கில் இருந்து சிக்கிம், அருணாசலப் பிரதேசம் வரையிலான 3,600 கிலோமீட்டர் நீள எல்லை நெடுகிலும் எப்போதுமில்லாத வகையில் தங்கள் துருப்புக்களை அதிக அளவில் குவித்து வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவுக்கு ஆதரவாக வெளிப்படையாக தங்கள் ஆதரவை பிரான்ஸ், ரஷ்யா அறிவித்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் தென் சீனக்கடல், பசிபிக் மகா சமுத்திரம், தென்னிந்திய பெருங்கடல் பகுதிகளில் இந்தியாவுக்கு ஆதரவாக சீன ஆதிக்கத்தை தடுக்கும் வகையில் தங்கள் கடற்படையைக் கொண்டு உதவப் போவதாக கூறியுள்ளன.

இந்த நிலையில் பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், பங்களாதேஷ் ஆகிய இந்தியாவின் அண்டை நாடுகளின் உதவியை சீனா பெறலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக பாகிஸ்தானை சீனா இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தக் கூடும் என தெரிகிறது. சீனாவின் சில ராணுவ அதிகாரிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத அமைப்பான அல்-பத்ர்-ன் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் உதவியுடன் சந்தித்துள்ளனர். இந்த பயங்கரவாத அமைப்பிற்கு நிதி உதவி அளித்து, இந்த அமைப்பை வலுப்படுத்தி இந்தியாவிற்கு எதிராக தாக்குதல் நடத்த சீனா பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பு மூலம் முயல்வது தெரிந்துள்ளது.

இந்நிலையில், சீனாவுக்கு ஆதரவாக ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்ஜித்-பலுசிஸ்தான் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 20 ஆயிரம் பேர் குவிக்கப்பட்டு உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகின. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. அந்நாட்டு ராணுவம் விடுத்துள்ள அறிக்கையில், "எல்லையில் பாகிஸ்தான் படைகள் குவிக்கப்பட்டதாக கூறப்படும் தகவல்களில் துளிக்கூட உண்மையில்லை. அதே போல, ஸ்கராது விமான தளத்தை சீனா பயன்படுத்தி வருவதாகவும் அது சீன ராணுவ கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறுவதும் மிகவும் அபத்தமானது. மேலும் கடுமையாக கண்டிக்கத்தக்கது, இதை இந்தியா நம்ப வேண்டாம்" என கூறியுள்ளது.

Similar News