இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மும்பையும், சிகிச்சையில் உள்ளவர்களில் பெங்களூருவும் முதலிடம்!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மும்பையும், சிகிச்சையில் உள்ளவர்களில் பெங்களூருவும் முதலிடம்!

Update: 2020-07-24 06:13 GMT

இந்தியாவில் மகாராஷ்டிராவில் உள்ள மும்பை நகரம் அதிக பாதிப்பில் முதலிடத்திலும் மற்றும் கர்நாடகா நகரமான பெங்களூருவில் சிகிச்சையில் உள்ளவர்களில் முதலிடத்திலும் இருக்கிறது.

இந்தியாவில் தினந்தோறும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் இதுவரை 12,38,635 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 29,861 பேர் உயிரிழந்து உள்ளனர். இதில் இந்தியாவின் முக்கிய நகரங்களான மும்பை, பெங்களூரு, டெல்லி, சென்னை ஆகிய நகரங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. அதே சமயத்தில் சில நகரங்களில் குணமடைவோர் விகிதம் அதிகரித்து வருகிறது.

தற்போது கொரோனா பாதிப்பில் மும்பை முதலிடத்திலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களில் பெங்களூரு முதல் இடத்திலும் உள்ளது. பெங்களூருவில் இதுவரை 39,200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 29,090 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மும்பையில்1,05,923 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 22,599 பேர் மட்டும்தான் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், தற்போது டெல்லியில் 14,554 பேரும், சென்னையில் 13,572 பேரும், கோல்கட்டாவில் 5,908 பேரும் சிகிக்சை பெற்று வருகின்றனர்.

Similar News