சிங்கப்பூரில் மீண்டும் பிரதமரான லீ செய்ன் லூங்வுக்கு பிரதமர் மோடி வாழ்த்து.!

சிங்கப்பூரில் மீண்டும் பிரதமரான லீ செய்ன் லூங்வுக்கு பிரதமர் மோடி வாழ்த்து.!

Update: 2020-07-11 13:33 GMT

சிங்கப்பூரின் பிரதமர் லீ செய்ன் லூங். இவருடைய பீப்பிள் ஆக் ஷன் கட்சி தான் ஆளுங்கட்சியாக உள்ளது. இவருடைய ஆட்சிக் காலம் முடிவதற்கு இன்னும் 10 மாதம் இருக்கின்ற சமயத்தில் பிரதமர் லீ முன்பே தேர்தலை அறிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பரவலை மீறி இந்த பாராளுமன்ற தேர்தலை நேற்று நடந்துள்ளது. இதில் வாக்களிக்க வந்த மக்கள் முககவசம், கையுறைகள் போன்றவற்றை அணிந்து பாதுகாப்பாக வந்து வாக்களித்துள்ளனர். பின்னர் கொரோனா வைரஸ் பரவலால் வாக்குச் சாவடிகள் அதிகமாக அமைக்கப்பட்டது.

காலையில் ஆரம்பிக்கப்பட்ட தேர்தல் இரவு 8:00 மணிக்கு வரை நடைபெற்றது. இந்த இடைவேளையில் மக்கள் ஆர்வமாக வரிசையில் இன்று வாக்கு அளித்தனர். இதனை தொடர்ந்து வாக்குப்பதிவு எண்ணிக்கை பாதுகாப்பாக நடந்துள்ளது.

தற்போது சிங்கப்பூரில் ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதில் 93 இடத்தில் நடந்ததில் 83 இடங்களை வென்று ஆளும் கட்சியான பீப்பிள் ஆக் ஷன் கட்சி மீண்டும் ஆட்சியை அமைத்தது.

https://twitter.com/narendramodi/status/1281862889591025665

இந்நிலையில் தேர்தலில் மீண்டும் வென்ற சிங்கப்பூரில் மீண்டும் பிரதமரான லீ செய்ன் லூங்வுக்கு பிரதமர் மோடி வாழ்த்தை தெரிவித்துள்ளார். இதை பற்றி ட்விட்டரில் கூறியது: வெற்றி பெற்ற பிரதமர் லீ செயின் லூங்வுக்கு பாராட்டுகள். சிங்கப்பூர் மக்களுக்கு அமைதியான மற்றும் வளமான எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.  

Similar News