எங்க "கருப்பன்" நடந்து போனா! கெத்தாக சூரி ட்விட்டரில் பதிவு.!

எங்க "கருப்பன்" நடந்து போனா! கெத்தாக சூரி ட்விட்டரில் பதிவு.!

Update: 2020-07-07 04:34 GMT

தமிழ்சினிமாவில் காமெடி நடிகராக திகழ்பவர் சூரி இவர் பல படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். மேலும் இவர் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார். இவரின் எதார்த்த பேச்சாலும் காமெடியான மக்களின் மனதை கவர்ந்தவர்.

இவர் சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து மதுரையில் அம்மன் என்ற ஹோட்டலை தொடங்கினார். இப்போது சினிமாவிலும் இருந்துகொண்டே தனக்குப் பிடித்தமான தொழிலையும் பார்த்து கொண்டு வருகிறார்.

இப்போது சூரி டுவிட்டரில் கருப்பன் என்கிற கம்பீரமான காளைமாடு பிடித்துக்கொண்ட சாலையில் நடந்து வருகிறார்.

ஊரடங்குக்கு நடுவுல ஊரே அடங்கி நிக்கும் - எங்க "கருப்பன்" நடந்து போனா!! என்று பதிவிட்டுள்ளார். சூரி ஒரு நடிகராக இருந்தாலும் கிராமத்தில் மக்களுடன் மக்களாய் சாதாரணமாக இருந்து வருவது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Similar News