சச்சின் பைலட் ஓரங்கட்டிவிட்டு அவரது ஆதரவாளர்களுக்கு 'கொக்கி போடும்' ராஜஸ்தான் முதல்வர்....!

சச்சின் பைலட் ஓரங்கட்டிவிட்டு அவரது ஆதரவாளர்களுக்கு 'கொக்கி போடும்' ராஜஸ்தான் முதல்வர்....!

Update: 2020-07-18 04:43 GMT

ராஜஸ்தானுக்கு போதாத காலமாக இருக்கிறது. தற்போதைய ஆட்சி நிலைக்குமா கவிழுமா என்றே தெரியாமல் மக்களும் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்து வருகின்றனர்.மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி வீழ்வதற்கு முக்கிய காரணமாக இருந்த ஜோதிராதித்யா சிந்தியாவின் சூழ்ச்சியை போல ராஜஸ்தானின் நடக்குமா நடக்காதா என்று ஆட்சியாளர்கள் கலக்கமடைந்துள்ளனர். எனவே அசோக் ஆட்சியில் தொடர்ந்து நீடிப்பாரா இல்லையா என்பது உத்தேசமாக சொல்லிவிட முடியாது ஆகையால் இந்த ஆட்சி ஒரு வாழ்வா சாவா போராட்டமாக மாறிக்கொண்டிருக்கிறது.

கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட சச்சின் பைலட் துணை முதல்வராக தனது கடமைகளை நிறைவேற்ற கட்சியில் பாகுபாடு காட்டி மக்களுக்கு எந்த ஒரு சேவைகளையும் வழங்க அனுமதிக்கவில்லை. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் சச்சின் பைலட், ஆனால் கட்சியின் மூத்த தலைவரான அசோக்கை முதல்வராக்கி, பின்னர் சம்பிரதாயத்துக்கு துணைமுதல்வர் பதவியை சச்சின் பலருக்கு வழங்கினார். ஆனால் கட்சியில் உள்ள வேறுபாடு காரணமாக எந்த ஒரு செயலையும் திட்டங்களின் மக்களிடையே கொண்டு செல்ல சச்சின் பைலட் அனுமதிக்க கட்சி வட்டாரங்கள் மறுத்துள்ளதாக சச்சின் மேல் குற்றம் சாட்டியுள்ளார்.

2019 தேர்தல் தோல்விக்குப் பின்னர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகியதால், சிந்தியா, பைலட் போன்ற தலைவர்கள் காங்கிரசின் பழைய ஆளுமைக்கு திரும்பி வந்தார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது, அங்கு 'மூத்த' தலைமுறை தான் வரிசையாக ஆட்சி செய்து வருகிறது.இதனால் அவர்கள் குடும்ப வாரிசு அரசியல் தொடக்கத்தில் பல இளம் தலைவர்களை ஓரங்கட்டி கட்சியிலிருந்து வெளியேற வேண்டும் என்ற எண்ணத்துடன் மூத்த தலைவர்கள் செயல்பட்டனர்.

இப்போது ராஜஸ்தானில் பல இன்னல்களை சந்தித்து வருகிறது. அசோக் கெஹ்லோட் தனது அரசாங்கத்தை காப்பாற்ற தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தின் தவறுகளிலிருந்து கற்றுக் கொண்ட அசோக் கெஹ்லோட் சச்சின் பைலட்டின் அரசியல் விளையாட்டை சாதுரியமாக கையாண்டார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் இப்போது காணப்படுவது ஒரு முழுமையான வாழ்வா சாவா போராட்டம் தான் ஆட்சியாளர்கள் மத்தியில். அங்கு கெஹ்லோட் மற்றும் பைலட்டின் ஆதரவாளர்கள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர். சச்சின் பெயரில் ஆதரவாளர்களை தன் பக்கம் இழுத்து சச்சினை கழட்டி ஓரங்கட்ட முதல்வர் திட்டம் வகுத்துள்ளார்.

COVID-19 இன் காரணங்களால் தற்போது மத்திய மாநில அரசுகள் எந்த முடிவும் எடுக்கப்படாத ஒரு காரணத்தால் அசோக் கெஹ்லோட், எல்லா அதிகாரங்களையும் தனக்குத்தானே காப்பாற்றிக் கொண்டு வருகிறார், மேலும் சச்சின் பைலட்டுக்கு போதுமான ஆதரவு கிடைக்காததால் அசோக் தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் விளைவாக, ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்தில் இருந்து பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு தகுதிநீக்க அறிவிப்புகள் வெளியானது.இதற்கிடையில் சில ஆடியோ கசிந்துள்ளது (இது பாஜக, காங்கிரஸ் ஆட்சியை கலைத்துவிட்டு தன் பக்கம் வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளதாக அந்த ஆடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது) அதன்படி பாஜக குதிரை வர்த்தகத்தில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கூறுகிறது, மேலும் மாநிலத்தில் அசோக் கெஹ்லாட் அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்ய வேலை செய்கிறது என்றும் குற்றசாட்டை வைக்கிறது காங்கிரஸ்.

சச்சின் பைலட் தனது பணத்திற்காக கெஹ்லோட்டுக்கு பழைய இடைஞ்சலை தருகிறார் என்றும், மேலும் ஆதரவாளர்களை தன் பக்கம் வைத்துக் கொள்ளவும் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றனர் மற்றும் தகுதிநீக்க வழக்கு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு விசாரணையில் தொடங்கப்பட்டு வருகிறது. மேலும் அடுத்த கட்ட நடவடிக்கையை இரண்டு பேரும் என்ன செய்வார்கள் என்று யாருக்கும் தெரியாத மத்தியில் ராஜஸ்தான் அரசியல் மிகப்பெரிய சூறாவளி நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

Similar News