கொரானா வைரஸ் : கேரளாவின் கடலோரப் பகுதிகளில் சமூக பரவல் - முதல்வர் பினராய் விஜயன் ஒப்புதல்.!

கொரானா வைரஸ் : கேரளாவின் கடலோரப் பகுதிகளில் சமூக பரவல் - முதல்வர் பினராய் விஜயன் ஒப்புதல்.!

Update: 2020-07-18 12:17 GMT

கொரானா வைரஸ் தாக்குதலை எதிர்த்து நாடே போராடி வரும் நிலையில், முதன் முறையாக கேரள முதல்வர் பினராயி விஜயன், மாநிலத்தின் சில பகுதிகளில் தொற்று, சமூகப் பரவலாக மாறிவிட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். கேரள முதல்வர் இதுகுறித்துக் கூறுகையில், "திருவனந்தபுரத்தில் நிலைமை சிறிது மோசமாக உள்ளது. இரண்டு ஏரியாக்களில் (பூந்துறை மற்றும் புல்லுவிலா) சமூகப் பரவல் ஆரம்பித்து விட்டது, கடலோரப் பகுதிகளில் நோய் வேகமாகப் பரவி வருவதால், மோசமான சூழ்நிலை உருவாகியுள்ளது.நம்மிடம் இருக்கும் ஒட்டுமொத்த வளங்களையும் உபயோகித்து தான் நிலைமையை எதிர்கொள்ள முடியும்" என்று கூறினார்.

இதன் விவரங்களை பகிர்ந்து கொண்ட முதல்வர் விஜயன், பூந்துறையில் எந்தவித தொடர்பும் இன்றி எடுக்கப்பட்ட பரிசோதனைகளில் 50ல் 26 பேருக்கு தொற்றி இருப்பது உறுதி செய்யப்பட்டது. புல்லுவிலா பகுதியில் அவ்வாறு 67 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் 28 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கேரளாவில் வித்தியாசமான இடங்களில் சமீப காலமாக அதிக தொற்றுகள் தோன்றி வருகின்றன.நேற்று ஜூலை 17 ஆம் தேதி மொத்தம் 791 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு விட்டது. இது தான் கேரளாவில் ஒரு நாளில் பதிவு செய்யப்பட்ட அதிக தொற்றுகள் ஆகும். கேரளாவில் மொத்தம் 11 ஆயிரம் தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு அவர்களில் 6 ஆயிரம் பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் கேரளா மொத்தம் நான்கு லட்சத்துக்கும் குறைவான பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது. ஒப்பிட்டு கூறுகையில் அண்டை மாநிலங்களான கர்நாடகம் தமிழ்நாடு கிட்டத்தட்ட அதைவிட மூன்று மடங்கு எண்ணிக்கையிலான பரிசோதனைகளை மேற்கொண்டு உள்ளனர். இதற்கிடையில் முதல்வர் பினராய் விஜயன் மேலும் கூறுகையில் உள்ளூரிலேயே பரவிவரும் தொற்றுக்களின் எண்ணிக்கைக்கு காரணம் மக்களின் அலட்சியமே என்று தெரிவித்தார் இந்த ரீதியிலாக சென்று கொண்டிருந்தால் தொற்றுக்கள் பரவுவதை இந்த வருட இறுதியில் மட்டுமே கட்டுப்படுத்த முடியும் என்றும் கவலையுடன் தெரிவித்தார்.

Source: The Hindustan Times.

Similar News