கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது - உலக சுகாதார அமைப்பு விடுக்கும் எச்சரிக்கை.!

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது - உலக சுகாதார அமைப்பு விடுக்கும் எச்சரிக்கை.!

Update: 2020-07-24 11:48 GMT

கொரோனா வைரஸ் சில நாடுகளில் தீவிரமாகப் பரவி வருகிறது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் உலக அளவில் 1.5 கோடிக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த வைரஸை அழிப்பதற்கு உலக நாடுகள் தீவிரமாக தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து வருகிறது. ஆனால் ஐந்து மாதத்துக்கு மேலாக எந்த நாடும் முழுமையான மருந்து கண்டுபிடிக்கவில்லை.

தற்போது கொரோனா வைரஸ் பரவல் சில நாடுகளில் அதிகமாக உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனை பற்றி உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியது: கொரோனா வைரஸ் பரவல் சில நாடுகளில் அதிகம் பரவி உள்ளது.. இந்த வைரசால் சிறிய நாடுகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. உலகளவில் மொத்த கொரோனா பாதிப்பு மூன்றில் இரு பங்கு 10 நாடுகளை சேர்ந்தவையாக இருக்கிறது. அந்த நாடுகளில் ஊரடங்கை பின்பற்றி மக்களை காக்க தீவிரமாகப் போராட வேண்டும்.

மேலும், முக்கியமாக அமெரிக்காவில் ஒவ்வொரு மணி நேரமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இதுவரை அமெரிக்காவில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. உலகளவில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் பிரேசிலும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும் மற்றும் நான்காவது இடத்தில் ரஷ்யாவும் உள்ளது.

இவ்வாறு டெட்ரோஸ் அதனோம் கூறியுள்ளார்.

Similar News