யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவு வெளியீடு: தமிழகத்தை சேர்ந்த மாணவர் ஏழாவது இடம்.!

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவு வெளியீடு: தமிழகத்தை சேர்ந்த மாணவர் ஏழாவது இடம்.!

Update: 2020-08-04 08:05 GMT

2019 ஆம் வருடத்தின் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸின் இறுதித் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது.

ஐஏஎஸ், ஐபிஎஸ், உள்பட மத்திய அரசு வேலை இடங்களுக்காக யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு வருட தோறும் நடைபெற்று வருகிறது. கடந்த 2019ஆம் வருடத்தின் யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு செப்டம்பர் மாதம் நடந்தது.

அதன் பிறகு பிப்ரவரி மாதம் முதன்மைத் தேர்வு மற்றும் மார்ச் மாதம் நேர்காணல் தேர்வும் நடந்தது. இந்த கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணத்தினால் நேர்காணல் தேர்வு பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது கடந்த ஜூலை 20 முதல் விடுபட்டவர்களுக்கு நேர்காணல் தேர்வு நடைபெற்று, இன்று இறுதித் தேர்வின் முடிவில் வெளியாகி உள்ளது.

இந்த முடிவுகளை தெரிந்து கொள்வதற்கு https://www.upsc.gov.in/ என்கிற இணையதளத்தில் பார்க்கலாம்.

மேலும், 829 பணி இடங்களுக்கு தேர்வு நடை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் நாகர்கோவிலைச் சேர்ந்த கணேஷ் குமார் பாஸ்கர் என்பவர் இந்திய அளவில் 7-வது இடத்தையும் மற்றும் தமிழ்நாட்டில் முதல் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.  

Similar News