சச்சின் டெண்டுல்கர் பரிசாக கொடுத்த பேட்டை வைத்து அதிவேக சதம் அடித்த அப்ரிடி - ரகசியத்தை பகிர்ந்த முன்னாள் பாகிஸ்தான் வீரர்.!

சச்சின் டெண்டுல்கர் பரிசாக கொடுத்த பேட்டை வைத்து அதிவேக சதம் அடித்த அப்ரிடி - ரகசியத்தை பகிர்ந்த முன்னாள் பாகிஸ்தான் வீரர்.!

Update: 2020-08-03 12:27 GMT

சச்சின் டெண்டுல்கர் பயன்படுத்தி பரிசாகக் கொடுத்த பேட்டை வைத்து அதிவேக சதம் அடித்தார் சாகித் அப்ரிடி. இந்தத் நிகழ்வை பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் பகிர்ந்துள்ளார்.

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடி. பாகிஸ்தான் அணியின் கேப்டனாகவும் மற்றும் அணியின் ஆல்ரவுண்டர் ஆகவும் இருந்து இருக்கிறார். இவர் பாகிஸ்தான் அணிக்கு நுழைந்து இரண்டாவது ஒருநாள் போட்டியிலேயே அதிவேகமாக சதமடித்து சாதனை படைத்துள்ளார். இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 37 பந்துகளில் 100 ரன்களை விளாசினார். மொத்தமாக 40 பந்துகளில் 104 ரன் எடுத்து சாதனை படைத்தார். இதன் பிறகு சுமார் 18 ஆண்டுகள் எவரும் இந்த சாதனையை முறியடிக்க வில்லை.

அந்தப் போட்டியில் அப்ரிடி அதிரடியாக விளையாடிய பேட் அவருக்கு சொந்தமானது கிடையாது. அது சச்சின் பயன்படுத்தி பரிசளித்த பேட் என முன்னாள் கிரிக்கெட் வீரர் அசார் முகமது தெரிவித்துள்ளார்.


இதை பற்றிய அசார் கூறியது: அந்த சமயத்தில் அப்படி ஒரு பந்து வீச்சாளர் மற்றும் அணியில் ஆறாவதாக களம் இறங்குபவர். ஆனால், இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அப்ரிடி மூன்றாவதாக களமிறக்க திட்டமிட்டனர். அந்த சமயத்தில் வாகனர் யூனிஸ் ஒரு பேட்டை கொடுத்து அபிரிடியை விளையாட சொன்னார்.

அந்த பேட் சச்சின் பரிசாகக் கொடுத்தது. அந்த போட்டிக்கு பின்பு ஒரு பந்து வீச்சாளராக இருந்த அப்ரிடி பேட்ஸ்மேன் ஆகவும், ஆல்ரவுண்டர் ஆகவும் பாகிஸ்தான் அணியின் கேப்டனாகவும் இடம் பெற்றார் என அசார் முகமது தெரிவித்துள்ளார்.

Similar News