"பெரியார்தான் எங்களுக்கு முக்கியம் கந்த சஷ்டி கவசம் இல்லை" - தி.மு.க ஆ.ராசா ஆவேசம்!

"பெரியார்தான் எங்களுக்கு முக்கியம் கந்த சஷ்டி கவசம் இல்லை" - தி.மு.க ஆ.ராசா ஆவேசம்!

Update: 2020-08-02 11:13 GMT

தி.மு.க என்றாலே கருத்துக்கள் மேடைக்கு மேடை பேசும், அதன் வளர்ச்சியே மேடைப்பேச்சால் வந்தது, கட்சியில் தலைமை ஆகட்டும் அடிமட்ட தொண்டன் ஆகட்டும் அனைவரும் பேசி பேசியே கட்சியை வளர்த்தனர். இன்று பேசிப்பேசியே கட்சியை அழிக்க ஆரம்பித்து விட்டனர். ஆனால் இன்று அப்படியே தலைகீழ். கட்சியின் தலைமையே நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்று அறிக்கை விட்டாலும், அதனை உடன்பிறப்புகள் வீதிக்கு வீதி நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் இல்லை என போஸ்டர் அடித்து பிரச்சாரம் செய்தாலும், அத்தனை பிரச்சாரங்களையும் நேற்று தி.மு.க எம்.பியும், கொள்கை பரப்பு செயலாளருமான ஆ.ராசா அவர்கள் அப்படியெல்லாம் இல்லை என்கிற கருத்தை அடித்து கூறியிருக்கிறார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த ஆ.ராசா அவர்கள் கூறியது, "கந்த சஷ்டி அவமதிப்பு ஒரு சின்ன விஷயம், இதுக்கு போய் தலைவர் ஸ்டாலின் கருத்து கூறனும்ன்னு அவசியம் இல்லை ஏன் ஆர்.எஸ் பாரதி கறுப்பர் கூட்ட அவமதிப்புக்கு கருத்து சொன்னது பத்தாதா இதில் ஸ்டாலின் வேறு கருத்து கூற வேண்டுமா?" என்ற அதிகார தோரணையிலேயே பேசினார்.

மேலும் நெறியாளர் "பெரியார் சிலை அவமதிப்பு விவகாரத்தில் உடனே கருத்து சொன்ன ஸ்டாலின் ஏன் கந்த சஷ்டி விவகாரத்தில் அமைதி காத்தார்? இந்துக்களை அவமதிக்கின்றாரா அல்லது பொருட்படுத்தவில்லையா?" என்று கேட்டதற்கு ஆ.ராசா அவர்கள், "பெரியாரும், கந்த சஷ்டியும் ஒன்னா? எங்களுக்கு பெரியார்தான் அடிப்படை அதனால் கூறினோம். கந்த சஷ்டி அப்படியல்ல அது சின்ன பிரச்சனை அதுக்காக எங்கள் தலைவர் கருத்து கூற அவசியமில்லை! மேலும் தி.மு.க கருத்து கூற வேண்டிய அவசியமும் இல்லை மாறாக நீங்கள் யார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்'தான் கருத்து கூற வேண்டும் என்று கூற?" என அதிகார தோரணையுடன் நெறியாளரை திருப்பி கேட்டார் தி.மு.க-வின் ஆ.ராசா.

தி.மு.க-வின் ஸ்டாலினோ அவர்களின் உடன்பிறப்புகளோ இந்துக்களின் எதிரி அல்ல, தி.மு.க என்று பறைசாற்றி கொண்டிருக்கும் போது தி.மு.க-வின் ஆ.ராசாவின் இந்த கருத்து இந்துக்களை தி.மு.க மதிக்கவில்லை என்றே தெரிகிறது.

Similar News