அயோத்தி ஸ்ரீராமர் கோயில் முதல் பிரசாத தட்டு யாருக்கு வழங்கப்பட்டது? ஆனந்த கண்ணீரில் குடும்பத்தினர்!

அயோத்தி ஸ்ரீராமர் கோயில் முதல் பிரசாத தட்டு யாருக்கு வழங்கப்பட்டது? ஆனந்த கண்ணீரில் குடும்பத்தினர்!

Update: 2020-08-07 03:31 GMT

அயோத்தியில் உள்ள தலித் குடும்பம் மாகபீர் குடும்பத்தினர். மிக சிறந்த ராமபக்த குடும்பம் ஆகும். சென்ற நாடாளுமன்ற தேர்தலின் போது பிரச்சாரத்துக்கு முதல்வர் ஆதித்யநாத் யோகி அங்கு சென்றிருந்த போது பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள மகாபீர் குடும்பத்தின் வீட்டை பார்வையிட்டார்.

அப்போது ஆதித்யநாத் யோகி மகாபீரின் எளிமையான வீட்டில் தங்கி, உணவருந்தினார். அப்போது ஸ்ரீ ராமபிரானின் மீது அவர் குடும்பத்தினர் காட்டிய மிகுந்த பக்தியை கண்டு உருகினார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி பங்கேற்ற ஸ்ரீராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவின்போது சிறப்பு அழைப்பாளராகவும் மகாபீர் குடும்பம் அழைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் முதன்முதலாக வழங்கப்பட்ட ஸ்ரீராமர் கோவில் பிரசாத தட்டை கோவில் நிர்வாகத்தினர் மகாபீர் குடும்பத்துக்கு வழங்கினர். ஸ்ரீராமர் படங்களுடன், துளசி மாலையும் அவருக்கு வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டார். முதல் பிரசாதம் தனக்கு வழங்கப்பட்டது குறித்து மாகாபீர் ஆனந்த கண்ணீர் வடித்தார்.

இந்த நிலையில் ராமஜென்ம பூமி வளாகம் முழுவதும் நேற்று சுத்தம் செய்யப்பட்டதாகவும், கோவில் கட்டுமான பணிகள் நாளை முதல் தொடங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Similar News