பாபர் மசூதி இடிப்பிற்குப் பின் ராம் லாலாவை தற்காலிகக் கோவிலில் வைத்த கதை.!

பாபர் மசூதி இடிப்பிற்குப் பின் ராம் லாலாவை தற்காலிகக் கோவிலில் வைத்த கதை.!

Update: 2020-08-04 02:13 GMT

ராமர் கோவிலின் பூமி பூஜை நெருங்கி வரும் நிலையில், பாபர் மசூதி இடிப்பது குறித்துப் பல நினைவுகள் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றன. அதில் ஒன்றாக 1992 இல் ராம் லாலா கோவில் இடிக்கப்பட்டது, அதன் பின்னர் தற்காலிகமாக கோவில் எழுப்பப்பட்ட போது கலந்து கொண்ட கரசேவகர்களில் ஒருவர் பாபா சத்தியநாராயணன் மௌர்யா. சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில், ஆயுதப் படைகள் தங்களைச் கைது செய்ய வந்தபோது எவ்வாறு சிறிது நேரத்தில் சிந்தித்து ராம் லாலாவுக்கு கோயில் காட்டினர் என்பதைச் சிறுகதையாகக் கூறினார்.



பாபா என்று அழைக்கப்படும் பாபா சத்தியநாராயணன் மௌர்யா கூறுகையில்," டிசம்பர் 7 இடிந்த இடத்திற்கு காவல்துறையினர் வருகின்றனர் என்று அறிந்த பின்பு எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்கள் சிறிது நேரத்தில் கோவிலைக் கட்டியாகவேண்டும். அவ்வாறு செய்யாதிருந்தால் தற்போது வரை அது சர்ச்சைக்குரிய நிலமாகவே இருந்திருக்கும், ராமர் கோவில் என்று அறியப்பட்டு இருக்காது. கடவுள் ராமர் அதற்கு வழிகாட்டினார், நாங்கள் கொண்டுவந்த துணிகளைக் கொண்டு சிறிய கோவில் ஒன்றை அமைத்தோம்." ராமர் கோவிலின் கட்டுமான பணிக்குத் தள்ளி வைக்கப்பட்ட தற்காலிக கோவில் ராம் லாலா கட்டமைப்பினை போன்றே இருந்தது

மசூதியை இடிப்பதற்கு முன்பு, ராம் லாலாவின் சிலை மசூதியின் மையப்பகுதி வைக்கப்பட்டது. இது 1949 டிசம்பர் இரவில் சில புனிதர்களால் வைக்கப்பட்டது, பின்னர் மத வன்முறையைத் தடுக்க அரசாங்கத்தால் மசூதி பூட்டப்பட்டது. இதற்கு முன்னர் பிரிட்டிஷ் அரசாங்கம் 1859இல் அந்நிலத்தை இரண்டாகப் பிரித்த நிலையில் முஸ்லீம் மற்றும் இந்துக்கள் அந்த இடத்தில் வழிபாடு செய்து வந்தனர். மசூதி மற்றும் உள்மன்றம் முஸ்லிம்களுக்கும், மன்றத்தின் வெளிப்பகுதி இந்துக்களுக்கும் பிரித்தளிக்கப்பட்டது. 1992 இல் மசூதி இடிக்கப்பட்ட பின்னர், சிலையை அமைக்கத் தற்காலிக கூடாரமாக இக்கோவில் எழுப்பப்பட்டது.

ராமர் கோவிலின் இயக்கத்தின் போது பாபா முக்கிய பங்காற்றினார். " ராம் லாலா ஹும் ஆயேங்கா, மந்திர் வாஹின் பனாயெங்கே ," என்னும் புகழ் பெற்ற மந்திரத்தைக் கொடுத்தவர், இன்றும் புகழ்பெற்று விளங்குகிறது. அம்மந்திரம் 28 வருடங்களாக ஒவ்வொரு முறையும் ராமர் கோவிலின் விவாதம் எழும்போது உச்சரிக்கப்படுகின்றது. சமூக ஊடகங்கள் ராமர் கோவிலின் அறியப் புகைப்படங்கள் மற்றும் வீடியோகள் பகிரப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 5 2020, ராமர் கோவிலின் பூமி பூஜை அயோத்தியில் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, முரளி மனோகர் ஜோஷி, கோத்தாரி சகோதர்களின் சகோதரிகள் மற்றும் இன்னும் சில தலைவர்கள் பங்கேற்கின்றனர். கோவிலின் அடிகள் 22.6கிலோ செங்கல் வைக்கப்பட உள்ளது. 2019 நவம்பர் 9ல் நீதிமன்றம் ரால் லாலா விராஜ்மான் க்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி இந்திய அரசாங்கத்தை ராமர் கோவிலின் கட்டுமானத்திற்கு உதவுமாறு உத்தரவிட்டது. பிப்ரவரியில் நீதிமன்ற அறிக்கைப் படி அறக்கட்டளை ஒன்று உருவாக்கப்பட்டது.



source: https://www.opindia.com/2020/08/ram-lalla-temporary-temple-tent-1992-babri-demolition/

Similar News