தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரு முக்கிய நடிகரோடு இணைகிறார் இயக்குனர் "லோகேஷ் கனகராஜ்".!

தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரு முக்கிய நடிகரோடு இணைகிறார் இயக்குனர் "லோகேஷ் கனகராஜ்".!

Update: 2020-08-05 10:24 GMT

திரையுலக நட்சத்திரங்களை திரும்பிப்பார்க்க வைக்கப்பட்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம், கைதி உள்ளிட்ட இரண்டு படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் மிக பிரபலம் ஆனார். இந்த படங்களின் வெற்றி மூலம் தற்போது லோகேஷ் கனகராஜ் தளபதி விஜயை வைத்து 'மாஸ்டர்' என்ற படத்தை இயக்கி வந்தார். மேலும் இந்த படத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் அவர் அடுத்த படம் யாரை வைத்து எடுக்கலாம் என கேள்விகள் எழுந்தன அதனை அடுத்து ரஜினிகாந்த் நடிப்பில் கமலஹாசன் தயாரிக்கும் படத்தை இவர் இயக்குவார் என தகவல்கள் வெளியாகின. இந்த செய்தி வெளியாகிய நிலையில் தற்போது தமிழ்,தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரு படத்தை இயக்கப் போவதாக குறிப்பிட்டிருக்கிறார்.

பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்திரி முவி மேக்கர் என்ற நிறுவனத்துடன் இணைந்து தெலுங்கு படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதில் தெலுங்கில் ஒரு முன்னணி நடிகர் நடிக்க இருப்பதாகவும், இதுகுறித்த தகவல் மிக விரைவில் வரும் என கூறப்படுகிறது. இந்த படம் தமிழ்,தெலுங்கு ஆகிய மொழிகளிலும் உருவாக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Similar News