இந்த ஐபிஎல் போட்டி மிக சவாலாக இருக்கும் - சுரேஷ் ரெய்னா தகவல்.!

இந்த ஐபிஎல் போட்டி மிக சவாலாக இருக்கும் - சுரேஷ் ரெய்னா தகவல்.!

Update: 2020-08-06 11:09 GMT

கடந்த 5 மாதத்துக்கு மேலாக கிரிக்கெட் போட்டி நடைபெறாததால் வீரர்கள் வீட்டிலேயே இருகின்றனர். இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி மிக சவாலாக இருக்கும் என இந்திய அணியின் ஆல்ரவுண்டரும் மற்றும் சேனை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டனான சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருந்த ஐபிஎல் 13 வது சீசன் கிரிக்கெட் தொடர் கொரோனா வைரஸ் காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டது ‌. தற்போது தான் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதனைப்பற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா கூறியது: உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி விட்டது. விளையாட்டு வீரர்களை பொருத்தவரை பிட்னஸ் தான் மிக முக்கியமானது. போட்டி நடைபெறுவதற்கு முன்பே நாங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செல்கிறது மிக நல்லது.

தற்போது நடக்கவிருக்கும் போட்டி புதிய சூழலாக இருக்கும். ஐசிசி-யின் பல விதிகளால் ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று வாரத்துக்கு ஒரு முறையாவது கொரோனா பரிசோதனை நடத்துவதைப் பற்றி வீரர்கள் என்ன நினைப்பார்கள் என்பது அவசியமானது.

கிரிக்கெட் போட்டி ஆரம்பிக்கும் முன்பே அனைத்து பரிசோதனையும் முடித்து மனத் தெளிவுடன் விளையாடுவதற்கு வீரர்கள் களம் இறங்க வேண்டும். ஏனென்றால் ஐந்து மாதத்துக்கு மேல் வீட்டிலேயே இருந்து வருகிறோம். இதனால் போட்டியில் எப்படி விளையாட போகிறோம் என்பதைப் பார்ப்பதற்கு ஆவலாக உள்ளது. இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி மிக சவாலாக இருக்கும் என தெரிகிறது.

இவ்வாறு சுரேஷ் ரெய்னா கூறினார்.   

Similar News