தலைவரிடம் வாழ்த்து பெற்ற தல !!

தலைவரிடம் வாழ்த்து பெற்ற தல !!

Update: 2019-08-13 11:39 GMT

தல அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. 5 நாட்களாக திரையரங்குகளில் பெண்கள் மற்றும் குடும்ப ஆடியன்ஸின் கூட்டம் அதிகரித்து வருவதால் திரையரங்குகளின் எண்ணிக்கைகள் மற்றும் காட்சிகள் அதிகரித்துள்ளதாகவும் இந்த படத்தின் வசூல் இன்னும் ஒரு சில நாட்களில் 'விஸ்வாசம்' படத்தின் வசூலை முறியடித்து விடும் என்றும் கூறப்படுகிறது 


இந்த படத்திற்கு அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி நடுநிலை ரசிகர்களும், பெண்களும் பெரும் ஆதரவு கொடுத்து வரும் நிலையில் இந்த படத்தை பார்த்த திரையுலக பிரபலங்களும் அஜித் உள்பட படக்குழுவினர்களை பாராட்டி வருகின்றனர். கோலிவுட் திரையுலகில் கிட்டத்தட்ட அனைத்து நட்சத்திரங்களும் 'நேர்கொண்ட பார்வை' படத்தை பார்த்து பாராட்டியுள்ள நிலையில் நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்தை பார்த்தார். படம் பார்த்தபின்னர் அஜித்தை தொலைபேசியில் அழைத்து ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்ததாகவும் அதற்கு அஜித் நன்றி தெரிவித்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது 


Similar News