முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்.! #CMEdappadi #TNGovt #AssemblyTN

முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்.! #CMEdappadi #TNGovt #AssemblyTN

Update: 2020-07-14 02:49 GMT

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் ஊரடங்கு தளர்வுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் தொடங்கப்படவுள்ள புதிய தொழில்கள், பிறப்பிக்கப்பட வேண்டிய அவசர சட்டங்கள் இருப்பின் அவை தொடர்பாகவும் கலந்தாலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், ஒரு சில மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகிறது எனவே இது குறித்து விவாதங்கள் நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News