சனாதனம் குறித்து சர்ச்சை பேச்சு - ஆ.ராசா மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என போலீசார் கைவிரிப்பு

சனாதனம் குறித்த சர்ச்சை பேச்சு -ஆ.ராசா மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என்று ஐகோர்ட்டில் போலீஸ் தகவல் அளித்துள்ளது.

Update: 2022-10-18 09:00 GMT

சென்னை வேப்பரியில் உள்ள பெரியார் திடலில் கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய முன்னாள் அமைச்சரும் எம்.பியுமான ஆ. ராசா இந்து மதம் மட்டும் சனாதன தர்மம் குறித்து பேசினார்.இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் ஜோசப் என்பவர் புகார் செய்தார். அதில் மத நல்லிணக்கம் மற்றும் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக உள்ளது. எனவே அவர் மீது, வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். பின்னர் தான் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட கோரிக்கோட்டில் அவர் மனு தாக்கல் செய்தார்.


இந்த மனு நீதிபதி வி.சிவஞானம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல் மனுதாரரின் புகார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று அறிக்கை கொடுத்துள்ளனர் என்று கூறினார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.





 


Similar News