இருசக்கர வாகனத்தில் வேப்பிலையுடன் கீற்றுகொட்டகை அமைத்து கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் சமூக ஆர்வலர்கள்.!

இருசக்கர வாகனத்தில் வேப்பிலையுடன் கீற்றுகொட்டகை அமைத்து கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் சமூக ஆர்வலர்கள்.!

Update: 2020-04-11 03:26 GMT

புதுச்சேரி அறம் நலப்பணி சங்க தலைவர் ஆனந்தன் வித்தியாசமான முறையில் பொதுமக்களுக்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகிறார். அந்த வகையில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோன வைரசில் இருந்து மக்களை பாதுகாக்க நூதன விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் அதிக அளவில் வெளியே சுற்றி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கவும் பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வலியுறுத்தி அனுபவ் வித்யாஷ்ரம் பள்ளி மற்றும் அறம் நலப்பணி சங்க சார்பில் அதன் தலைவர் ஆனந்தன், துணைத்தலைவர் சீத்தாராமன் ஆகியோர் நூதன இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை தொடங்கியுள்ளனர்.

தனது இரு சக்கர வாகனத்தில் கீற்று கொட்டகை அமைத்து, அதை சுற்றி வேப்பிலையை பரப்பி அலங்கரித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் கொரோனா வைரஸ் தடுப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை இருசக்கர வாகனத்தின் முன்பு வைத்தும், வாகனத்தில் ஒலிபெருக்கி ஸ்பீக்கர் வைத்தும் விழிப்புணர்வு வாசகங்கள் ஒலிக்கும் படி செய்து புதுச்சேரி மாநிலம் முழுவதும் விழிப்பணர்வு பிராச்சார பயணத்தை தொடங்கியுள்ளார்.

வருகிற 14-ம் தேதி வரை புதுச்சேரி மாநிலம் முழுவதும் தனது இருசக்கர வாகனத்தில் சென்று பொதுமக்கள் வெளியே வரவேண்டாம், வீட்டிலேயே இருக்க வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.

Similar News